Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அப்படித்தான் நடக்குமென தெரியும்".. தினேஷ் கார்த்திக் பேச்சு.. சிக்கும் தோனி.. என்ன செய்ய போகிறார்?

துபாய்: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான கடினமான போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக வெற்றிபெற்று ஆச்சர்யம் அளித்துள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் தோனியா தினேஷ் கார்த்திக்கா என்று கேள்வி எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வருகிறது. தொடர்ச்சியாக வெல்ல வேண்டிய போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே தோல்வி அடைந்து வருகிறது.

கொல்கத்தா அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் எதிரான போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் தோனிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

கேப்டன்சி

கேப்டன்சி

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒவ்வொரு முறை ஒவ்வொரு வீரர் மீதும் புகார்கள் வைக்கப்படுகிறது. ஆனாலும் மொத்தமாக தோனி எடுத்த தவறான முடிவுகள்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு கட்டங்களில் தோனி அணிக்குள் தவறான முடிவுகளை எடுத்துள்ளார். முக்கியமாக சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டரில் தோனி நிறைய தவறுகளை செய்து வருகிறார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் கடந்த 7 போட்டிகளாக சரியாக இல்லை. ஆனால் தோனி இது தொடர்பாக பெரிய அளவில் அதிரடி மாற்றம் எதையும் செய்யவில்லை. அதேபோல் கடைசி ஐந்து ஓவர்களில் சிஎஸ்கேவின் டெத் பவுலிங் மிக மோசமாக உள்ளது. இதையும் இன்னும் தோனி சரி செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் தற்போது தோனியின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜெயிக்கவே வாய்ப்பு இல்லாத போட்டிகளில் கூட அணியை வெற்றிபெற வைக்கிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்த போதும் கூட கொல்கத்தா வெற்றிபெற்றது. அதன்பின் நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி கடைசி 5 ஓவரில் ரன் செல்வதை கட்டுப்படுத்தி ஆட்டத்தை மொத்தமாக புரட்டி போட்டு வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

இதெல்லாம் போக தினேஷ் கார்த்திக் கொடுக்கும் ஓவர் ரொட்டேஷன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. தினேஷ் கார்த்திக் எப்போது யாருக்கு ஓவர் கொடுப்பர் என்பதே கணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது . கடைசி ஓவரை ஸ்பின் பவுலர்களுக்கு கொடுத்து இவர் அணியை வெற்றிபெற வைக்கும் வித்தை கிரிக்கெட் வல்லுநர்களை கவர்ந்து உள்ளது. முழுமையான கேப்டனாக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார்.

எப்படி

எப்படி

நேற்று வெற்றிக்கு பின் பேசிய தினேஷ் கார்த்திக், அணியில் பயிற்சியாளர் மற்றும் இயான் மோர்கன் கொடுக்கும் அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். இவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நாங்கள் குழுவாக செயல்படுகிறோம். மெக்குலம் கொடுக்கும் அறிவுரைகள் அணியை சரியாக வழி நடத்த உதவுகிறது. உலகின் பெஸ்ட் கேப்டன் இயான் மோர்கன் என் பக்கம் இருக்கிறார்.

என் பக்கம் உள்ளார்

என் பக்கம் உள்ளார்

இதனால் இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்த போட்டி எங்களுக்கு எப்படி முடியும் என்று தெரியும். அதேபோல் நடந்தது. கடைசி பந்தில் சிக்ஸ் செல்லாது என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது போல நடந்தது. கொல்கத்தா அணியை நாங்கள் குழுவாக வழி நடத்தி செல்கிறோம். அணியின் வெற்றிக்கும் இதுவே காரணமாக இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தனி ஆள்

தனி ஆள்

சிஎஸ்கே போல கொல்கத்தா அணியிலும் நிறைய மிடில் ஆர்டர் பிரச்சனைகள் இருந்தது . ஆனால் அதை எல்லாம் கூடிப்பேசி தினேஷ் கார்த்திக் தீர்த்து இருக்கிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஈகோவை விட்டுக்கொடுத்து சக வீரர்களிடம் ஆலோசனை கேட்பது போல தோனி ஆலோசனை செய்வது இல்லை. தோனி தனி ஆளாக முடிவுகளை எடுக்கிறார்.

தவறு எங்கே நடக்கிறது ?

தவறு எங்கே நடக்கிறது ?

பேட்டிங் ஆர்டர் தொடங்கி பவுலிங் வரை அனைத்திலும் தோனியே தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். இதுதான் தற்போது சிஎஸ்கேவில் பிரச்சனையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.தோனிக்கு யாராவது வழி காட்ட வேண்டும் . அவர் சிறப்பான கேப்டன்தான், ஆனாலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தோனிக்கு சில வழி காட்டுதல்கள் தேவைப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, October 11, 2020, 12:31 [IST]
Other articles published on Oct 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+