
என்ன
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு, அணியின் பேட்டிங் ஆர்டர்தான் காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் வாட்சன், டு பிளசிஸ், ராயுடு ஆடுகிறார்கள்., இவர்கள் அவுட் ஆன பின் வரிசையாக சிஎஸ்கே பேட்டிங் சொதப்புகிறது. சாம் கரன், பிராவோ போன்ற ஹிட்டர்கள் இருந்தும் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக சொதப்புகிறது.

காரணம் என்ன
இதற்கு காரணம், தோனி இறங்கும் பேட்டிங் ஆர்டர்தான் என்று கூறுகிறார்கள். ராயுடு அவுட் ஆன பின் தோனி இறங்குகிறார். அதன்பின் சாம் கரன், ஜாதவ் இறங்குகிறார்கள். பின் ஜடேஜா இறங்குகிறார். இந்த ஆர்டரில் செல்லும் போது மேட்ச் முடிந்து விடுகிறது. கடைசியில் பிராவோ போன்ற ஹிட்டர்கள் பேட்டிங் இறங்கவே முடியாமல் போய்விடுகிறது.

கொல்கத்தா
கொல்கத்தா அணியிலும் கடந்த இரண்டு வருடமாகவும், இந்த சீசன் தொடக்கத்திலும் இதே பிரச்சனை இருந்தது. கொல்கத்தாவில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தும் யாரை ஓப்பனிங் இறக்குவது என்பதில் பெரிய அளவில் குழப்பம் இருந்தது. அதேபோல் மிடில் ஆர்டர் தினேஷ் கார்த்திக் 4வது இடத்தில் இறங்கி வந்தார். அதன்பின் இயான் மோர்கன், பின் ரசல் இறங்கி வந்தனர்.

விமர்சனம்
கொல்கத்தாவின் இந்த பேட்டிங் ஆர்டர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. முதல் நான்கு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இந்த தவறை செய்து வந்தார். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு முன்னதாக தான் இறங்கி கட்டை போட்டார். தேவையில்லாமல் பந்துகளை குடித்து கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார். இதனால் அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆர்டரை மாற்றினார்.

பேட்டிங் ஆர்டர்
நரேனுக்கு பதில் ராகுல் திரிப்பாதியை ஓப்பனிங் இறக்கினார். அதேபோல் ராணா, நரேன், ரசல், இயான் மோர்கன் இறங்கிய பின்தான் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்தார். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, தனது பேட்டிங் ஆர்டர் மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு தாமதமாக பேட்டிங் செய்ய வந்தார். இங்குதான் சிஎஸ்கே கேப்டன் தோனி மோசமாக சொதப்புகிறார்.

ஏன்
தோனி கடந்த மூன்று போட்டிகளாக 3-5 இடங்களில் பேட்டிங் இறங்கி ஆடி வருகிறார். முக்கியமான கட்டத்தில் இறங்கும் இவர் அதிக பந்துகளை குடிக்கிறார். தினேஷ் கார்த்திக் முன்பு செய்ததை தோனி தற்போது சிஎஸ்கேவிற்கு செய்கிறார். இதற்கு பதிலாக ஜடேஜா, சாம் கரன், பிராவோ போன்றவர்களை முன்பே பேட்டிங் இறக்கிவிட்டுவிட்டு.. தோனி அதன்பின் இறங்கலாம். ஆனால் அதை தோனி செய்வது இல்லை

ஈகோ
தோனி, தான்தான் டாப் பேட்டிங் ஆர்டரில் இறங்குவேன் என்று முடிவு செய்து இறங்குகிறார். ஆனால் ரன் ரேட்டை காலி செய்துவிட்டு அவுட் ஆகி விடுகிறார் என்று ரசிகர்கள் புகார் வைக்கிறார்கள். இதனால் தோனி ஈகோ பார்க்காமல்.. தினேஷ் கார்த்திக் போல செயல்பட வேண்டும். தினேஷ் கார்த்திக் தனக்கு முன்பாக ஹிட்டர்களை களமிறக்கியது போல தோனியும் பிராவோ, ஜடேஜா போன்றவர்களை டாப் ஆர்டரில் இறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











