Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட மதிக்காத தோனி.. கச்சிதமாக பதிலடி தந்த கோலி..ஐபிஎல்லில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்

துபாய்: இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில், அதே இளைஞர்களை வைத்து பெங்களூர் கேப்டன் கோலி தற்போது அதிரடி காட்டி வருகிறார்.

2020 ஐபிஎல் தொடர் தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த வருடம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அணிகளான ஹைதராபாத், சிஎஸ்கே போன்ற அணிகள் மோசமாக சொதப்பி வருகிறது.

ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் பெங்களூர், கொல்கத்தா அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. அதிலும் பெங்களூர் அணி பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

உறுதி ஆகிவிட்டது

உறுதி ஆகிவிட்டது

எல்லா வருடமும் ஐபிஎல் தொடரில் பெங்களூர்தான் மிக மோசமாக ஆடும். பிளே ஆப் செல்லவே பெங்களூர் அணி மோசமாக திணறும். வெற்றி பெற வாய்ப்புள்ள போட்டிகளில் கூட தோல்வி அடைந்து பெங்களூர் அணிதான் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும். ஆனால் அதே பெங்களூர் இந்த முறை புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

எப்படியுள்ளது

எப்படியுள்ளது

ஆனால் ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக சிஎஸ்கே அணி மோசமாக ஆடி உள்ளது. 10 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் செல்லும் வாய்ப்பு ஏறத்தாழ கைநழுவி போய்விட்டது. மாறாக பெங்களூர் அணி பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

பிரகாசம்

பிரகாசம்

சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு நேற்று காரணம் சொன்ன தோனி, எங்கள் திட்டம் எதுவும் பலன் அளிக்கவில்லை. மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அணியில் வாய்ப்பு அளித்தோம். இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் எங்கள் திட்டம் பயன் அளிக்கவில்லை என்று தோனி கூறியுள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதாவது அணியில் இருக்கும் இளைஞர்களை நம்ப முடியாது என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் இளைஞர்களை வைத்தே கோலி தனது மோசமான பெங்களூர் அணியை மீட்டு உள்ளார். இத்தனை வருடம் அவமானங்களை மட்டுமே சுமந்து வந்த பெங்களூர் அணிக்கு இந்த வருடம் இளைஞர்கள்தான் உதவி உள்ளனர். ஸ்பார்க் இல்லை என்று இளைஞர்களை ஒதுக்காமல் .. அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கோலி முறையாக பயன்படுத்தி உள்ளார்.

யார் இவர்கள்

யார் இவர்கள்

தேவ்தத் படிக்கல், சைனி , வாஷிங்க்டன் சுந்தர், உடானா என்று பெங்களூர் அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு முறையும் இளைஞர்கள்தான் உதவி உள்ளனர். ஸ்பார்க் இல்லை என்று தோனி எந்த வயது வீரர்களை குறிப்பிடுகிறாரோ அதே வயது வீரர்களை வைத்து கோலி தனது அணியை மீட்டு இருக்கிறார். மிக மோசமான பார்மில் இருந்த பெங்களூர் அணியை மீட்டு தற்போது ஆர்சிபியை மூன்றாவது இடத்திற்கு கோலி முன்னேற்றி உள்ளார் .

எப்படி

எப்படி

இந்திய அணிக்குள் வந்த போது மூத்த வீரர்களை அனுப்பிவிட்டு இளைஞர்களை அணியில் எடுத்தார் தோனி. ஆனால் அதே தோனி இப்போதும் சிஎஸ்கேவில் மூத்த வீரர்களை மட்டும்தான் நம்புகிறார். பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற அணிகள் முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் சென்னை மட்டும் பார்ம் அவுட் ஆன பழைய வீரர்களை நம்புவது முழுக்க முழுக்க தவறானது ஆகும்.

Story first published: Tuesday, October 20, 2020, 15:43 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+