Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மொத்தமாக கலைக்க வேண்டும்".. மீள முடியாத சிக்கலில் மாட்டிய சிஎஸ்கே.. வளைக்கப்படும் தோனி.. பின்னணி

துபாய்: ஐபிஎல்லில் தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி தற்போது பிளே ஆப் போட்டிகளுக்கு செல்வது சந்தேகம் ஆகியுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கேவிற்கு மிக மோசமான தொடராக மாறியுள்ளது. முதலில் மும்பைக்கு எதிரான போட்டியை சிஎஸ்கே வெற்றியோடுதான் தொடங்கியது.

ஆனால் அதன்பின் நடந்த போட்டிகளில் சிஎஸ்கே வரிசையாக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான், டெல்லி போன்ற அணிகளிடம் எதிர்பாராத தோல்வியை சிஎஸ்கே தழுவியது.

அதன்பின்

அதன்பின்

அதன்பின் ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளால் அணியில் இருந்து சில வீரர்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. முரளி விஜய், கேதார் ஜாதவ் போன்றவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

நீக்கம்

நீக்கம்

முதல் இரண்டு தோல்விக்கு பின் முரளி விஜய் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அணியின் தோல்விக்கு இவர்தான் காரணம் என்று மொத்தமாக அவர் மீது பழி போடப்பட்டது. அதன்பின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு கேதார் ஜாதவ்தான் காரணம் என்று கூறப்பட்டது. அந்த போட்டிக்கு பின் ஜாதாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நேற்று புதிய படை

நேற்று புதிய படை

அணிக்குள் பிராவோ வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் உள்ளே வந்தார். பவுலிங் செய்ய சர்த்துல் தாகூர் அணிக்குள் வந்தார். சாவ்லா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கரன் சர்மா கூட அணிக்குள் எடுக்கப்பட்டார். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் நேற்று போட்டியில் இளம் வீரர் என் ஜெகதீசன் கூட அணிக்குள் வந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அணிக்குள் இத்தனை மாற்றங்கள் செய்யப்பட்ட பின்பும் கூட நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்தது. பல மாற்றங்களை செய்து அணியை தயார் செய்த பின்பும் கூட நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்தது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அணியில் உண்மையில் அதிரடியாக ஆட ஆட்களே இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஆட்கள் இல்லையா?

ஆட்கள் இல்லையா?

முக்கியமாக மிடில் ஆர்டரில் சிஎஸ்கே சார்பாக நன்றாக பேட்டிங் செய்ய ஆட்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அணியில் கிட்டத்தட்ட எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மிடில் ஆர்டரில் நன்றாக ஆட கூடிய வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிஎஸ்கே மீள முடியாத சிக்கலில் மாட்டி உள்ளது என்று கூறுகிறார்கள்.

கலைக்க வேண்டும்

கலைக்க வேண்டும்

இந்த முறை பிளே ஆப் செல்வதே இதனால் கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. இதனால் சிஎஸ்கே உடனே இரண்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது. சிஎஸ்கே மொத்தமாக அணியை கலைக்க வேண்டும். முக்கியமான வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு புதிய வீரர்களை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேறு என்ன

வேறு என்ன

இல்லையென்றால் டிரான்ஸ்பர் மூலம் தோனி புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. தொடருக்கு நடுவில் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய அனுமதி அளிக்கப்படும். அப்போது புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும். மிடில் ஆர்டரில் ஆட தகுதி உள்ளவர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 21:10 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+