Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மறைப்பதற்கு ஒன்றும் இல்லை".. சூசகமாக பேசிய தோனி.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது?.. பரபர பின்னணி!

துபாய்: சிஎஸ்கே அணியின் தோல்விக்கு நேற்று கேப்டன் தோனி அளித்த பேட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது . சிஎஸ்கே அணிக்குள் என்னதான் நடக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

2020 ஐபிஎல் சீசன் கிட்டத்தட்ட தோனிக்கு முடிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். 10 போட்டிகளில் இதுவரை ஆடி இருக்கும் சிஎஸ்கே 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்த வருடம் பிளே ஆப் செல்வது சிஎஸ்கேவிற்கு கனவாகி உள்ளது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வெறும் 125 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய ராஜஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பவுலிங்

பவுலிங்

இந்த போட்டிக்கு பின்பாக தோனி தனது பேச்சில், நேற்று மைதானம் ஸ்பீட் பவுலிங் செய்ய வசதியாக இருந்தது. நான் ஜடேஜாவை கொண்டு வந்ததற்கு காரணம் ஸ்பின் பவுலிங் எப்படி எடுபடுகிறது என்பதை பார்க்கத்தான். ஆனால் முதல் இன்னிங்சில் ஸ்பின் பவுலிங் எடுப்பட்டது போல இரண்டாவது இன்னிங்சில் எடுபடவில்லை.

ஸ்பின் பவுலிங்

ஸ்பின் பவுலிங்

இதனால் முதலில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த நினைத்தேன். பந்து கொஞ்சம் பழசு ஆன பின் ஸ்பின் பவுலர்களை கொண்டு வர நினைத்தேன். இரண்டாவது இன்னிங்சில் ஸ்பின் பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. எப்போதும் உங்கள் திட்டப்படி எல்லாம் நடக்கும் என்று கூற முடியாது.

நன்றாக யோசிக்க முடியும்

நன்றாக யோசிக்க முடியும்

எங்களின் செயல்முறையை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் திரும்பி செல்ல வேண்டும். எங்கள் செயல்முறை எப்படி இருக்கிறது. எங்கே தவறு நடக்கிறது. எங்கே திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்பதை ஆராய வேண்டும். நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் போட்டியின் முடிவும் இருக்கும். நல்ல முடிவு வந்தால் நன்றாக யோசிக்க முடியும்.

மறக்க ஒன்றும் இல்லை

மறக்க ஒன்றும் இல்லை

நாங்கள் பல லட்சம் ரசிகர்கள், மக்கள் முன்னிலையில் ஆடுகிறோம். இங்கே மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் செயலை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் டிரெஸ்ஸிங் ரூமில் எந்த பிரச்சனையும் இருக்காது. அணியின் ஒற்றுமை முக்கியம். நாங்கள் சில போட்டிகளில் எங்கள் பிளானை சரியாக செயல்படுத்த முடியவில்லை. அங்குதான் தவறு நடந்துவிட்டது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை

ஒற்றுமை

ஒவ்வொரு முறை சிஎஸ்கே தோல்வி அடையும் போது அணியின் ஒற்றுமை குறித்தும், டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் உறவு குறித்தும் தோனி பேசுகிறார். ஏன் இதை ஒவ்வொரு முறையும் தோனி குறிப்பிடுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. அணியின் வெற்றியை விட டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் உறவுதான் முக்கியமா என்று பலரும் தோனியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஜாதவ்

ஜாதவ்

ஜாதவ் 20 போட்டிகளாக சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார். டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் உறவை கருத்தில் கொண்டுதான் தோனி இவருக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அணியை விட நட்பும், பழக்கமும்தான் முக்கியமா? என்று தோனியிடம் பலரும் கேட்டுள்ளார்.

சுயம்?

சுயம்?

இதனால் டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது? தோனி சுயமாக முடிவு எடுக்கிறாரா? அல்லது யாருடைய அழுத்தத்தின் பெயரிலாவது செயல்படுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் அணி தேர்வை செய்வது யார்? அணியில் முடிவுகளை எடுப்பது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 20, 2020, 9:09 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+