For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி செய்த "மேஜிக்".. அரண்டு போன பிரித்வி ஷா.. இப்படியா பண்ணுவீங்க!?

துபாய்: டெல்லி அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவின் விக்கெட்டை சிஎஸ்கே கேப்டன் தோனி எடுத்த விதம் இன்று பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து வருகிறது.

சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி நிதானமாக ஆடி வருகிறது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடாமல் டெல்லி நிதானமாக ஆடி வருகிறது.

நிதானம்

நிதானம்

இதில் டெல்லி அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா மிகவும் நிதானமாக ஆடினார். பஞ்சாப்பிற்கு எதிரான கடந்த போட்டியில் அவசரப்பட்டு ஆடி அவுட்டானது போல ஆக கூடாது என்பதால் மிகவும் நிதானமாக ஆடினார். போக போக கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கில் வேகம் காட்டினார். அதிலும் பியூஷ் சாவ்லா ஓவரை பிரித்வி ஷா பிரித்தெடுத்தார்.

அவுட்

அவுட்

9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என்று அடுத்தடுத்து அதிரடி காட்டி அரை சதம் கடந்தார். இதனால் சென்னை அணியை ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அடித்து துவைத்தது போல பிரித்வி ஷாவும் செய்ய போகிறார் என்று கருதப்பட்டது. ஆனால் யாருடைய ஓவரில் பிரித்வி ஷா அடித்து வெளுத்தாரோ அதே ஓவரில் பிரித்வி ஷா அவுட்டானார்.

தோனி வேகம்

தோனி வேகம்

ஆம் பியூஷ் சாவ்லா ஓவரிலேயே இவர் அவுட்டானார். இவர் 64 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். சரியாக 13வது ஓவரின் 2வது பந்தில் சாவ்லா பந்தை இறங்கி அடிக்க பிரித்வி ஷா முயன்றார். ஆனால் பந்து அவரின் பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆகி மிஸ்ஸானது. இதை தோனி பிடித்து கண் இமைக்கும் நேரத்தில், ஸ்டம்பிட் செய்தார்.

செம ஸ்பீட்

செம ஸ்பீட்

பழைய தோனி எவ்வளவு வேகமாக செயல்படுவாரோ அதே வேகத்தில் இன்றும் தோனி செயல்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில், பிரித்வி ஷா சுதாரிக்கும் முன் பந்தை எடுத்து தோனி விக்கெட் செய்தார். மேஜிக் போல தோனி வேகமாக இந்த விக்கெட்டை எடுத்தார். இதனால் தோனி மீண்டும் வந்துவிட்டார்.. அவரின் வேகம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று ரசிகர்கள் சந்தோசப்பட தொடங்கி உள்ளனர்.

Story first published: Friday, September 25, 2020, 23:11 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020: Dhoni speed reflex against Delhi gets the wicket of Prithvi Shaw.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+