Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல இருக்கணுமா?வேணாமா?.. 2 சிஎஸ்கே வீரர்களை தாளித்த தோனி.. வலை பயிற்சியில் "வாத்தி ரெய்டு"!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Recommended Video

அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி இறக்க போகும் புதிய பிளேயிங் லெவன்

ஐபிஎல் தொடரில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு செல்ல சென்னை அணி தீவிரமாக முயன்று வருகிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றாலும், அடுத்தடுத்து ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.

இந்த தொடர் தோல்வி காரணமாக சென்னை அணி மீது கடுமையான அழுத்தங்கள் வைக்கப்பட்டுள்ளது. விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணி வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வீரர்கள்

வீரர்கள்

தோனியும், சிஎஸ்கே அணி நிர்வாகமும் சில முக்கியமான வீரர்கள் மீது கடுப்பில் உள்ளது. வாட்சன், முரளி விஜய் ஆகியோர் மிக மோசமாக ஆடி வருகிறார்கள். சென்னை அணி தொடர் தோல்வியை சந்திக்கவே இவர்கள் இருவரும்தான் காரணம் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் முரளி விஜய் ஆடும் 11 அணியில் இருந்து நீக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

ஆட மாட்டார்

ஆட மாட்டார்

கண்டிப்பாக முரளி விஜய் அடுத்த போட்டியில் எப்படியும் ஆட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இன்னொரு பக்கம் வாட்சன் சரியாக ஆடவில்லை என்றாலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டார். இவர் இப்போது சரியாக ஆடவில்லை என்றாலும் வரும் நாட்களில் கண்டிப்பாக ஆட வாய்ப்புள்ளது. இதனால் வாட்சன் நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

தோனி எப்படி

தோனி எப்படி

ஆனால் தோனி இவர்களை விட வேறு இரண்டு வீரர்கள் மீதுதான் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது . சென்னை அணிக்காக விளையாடும் ஜாதவ் மற்றும் ஜடேஜா இருவர் மீதுதான் தோனி கோபமாக இருப்பதாக கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் தோனிக்கு நெருக்கமான வீரர்கள். கடந்த மூன்று போட்டியிலும் இவர்களின் ஆட்டம் சரியாக இல்லாத காரணத்தால் தோனி, இவர்களை நன்றாக பயிற்சி செய்ய கூறி உள்ளார்.

ஜடேஜா

ஜடேஜா

எப்போதும் சென்னை அணிக்கு ஜடேஜா ஸ்விட் சர்ப்ரைஸ் கொடுத்து விக்கெட் எடுப்பார். தேவையான நேரங்களில் பேட்டிங் செய்து அதிரடி காட்டுவார். ஆனால் இந்த முறை ஐபிஎல் தொடரில் அவர் விக்கெட்டும் எடுக்கவில்லை. ரன்னும் எடுக்கவில்லை. மிக மோசமான பார்மில் ஜடேஜா கஷ்டப்பட்டு வருகிறார். அதிலும் இவர் ஓவரில்தான் அதிக அளவில் ரன்னும் செல்கிறது.

மோசமான லென்த்

மோசமான லென்த்

அதேபோல் இவரின் பவுலிங் லென்தும் இப்போதெல்லாம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பீல்டிங் மட்டுமே ஜடேஜாவை காப்பாற்றி வருகிறது. ஒரு பக்கம் ஜடேஜா இப்படி இருக்க இன்னொரு பக்கம் கேதார் ஜாதவ் அணியில் சிஎஸ்கே அணியில் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை.சரியாக பேட்டிங் செய்வது இல்லை. இவருக்கு பவுலிங் வாய்ப்பும் கொடுப்பது இல்லை.

பேட்டிங் பவுலிங்

பேட்டிங் பவுலிங்

அதேபோல் பீல்டிங்கும் சரியாக இல்லை. மற்ற அணிகளில் ராகுல் திவாதியா போல மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடி காட்டுகிறார்கள். ஆனால் இங்கு ஜாதவ் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். இதனால் இவர்கள் இருவர் மீதும் தோனி வலைப்பயிற்சியில் கடுமை காட்டியதாக கூறப்படுகிறது. அணியில் இருக்க வேண்டுமா, வேண்டாமா? என்று சிஎஸ்கே பயிற்சியாளர்கள் இவர்கள் இருவரிடமும் கடுமை காட்டியதாக கூறப்படுகிறது.

நீக்க முடியாது

நீக்க முடியாது

முரளி விஜயை எளிதாக நீக்கி விடலாம். ஆனால் ஜடேஜா, ஜாதவ் ஆகியோரை நீக்க சிஎஸ்கே நிர்வாகம் யோசித்து வருகிறது. இதனால்தான் தோனி இவர்கள் இருவரையும் கடுமையாக பயிற்சி செய்ய சொல்லி கடுமை காட்டி இருக்கிறார் என்கிறார்கள். அதோடு ஒவ்வோரு வீரரின் தனிப்பட்ட வலை பயிற்சியையும் தோனி மேற்பார்வை செய்ததாகவும் கூறுகிறார்கள்.

Story first published: Monday, September 28, 2020, 17:36 [IST]
Other articles published on Sep 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+