For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதுதான் சூட்சமம்.. போட்டிக்கு முன்பே சொன்ன தோனி.. அதே டீமோடு வந்த சிஎஸ்கே.. இப்படித்தான் வென்றது!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கேவின் இந்த ஆட்டம் குறித்து கேப்டன் தோனி போட்டிக்கு முன்பே பேட்டி அளித்து இருந்தார்.

சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக எதிர்பார்த்த அந்த வெற்றி கடைசியில் இன்று நடந்தேறியது. பஞ்சாப் போன்ற வலிமையான அணியை வீழ்த்தி சிஎஸ்கே இன்று வென்றுள்ளது.

துபாய் பிட்சில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த சிஎஸ்கே இன்று மாஸ் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே பேட்டிங்கில் செலுத்தியது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப்பில் இந்த முறை மயங்க் அகர்வால் ஏமாற்றம் அளிக்க கே.எல் ராகுல் மட்டும் பொறுப்பாக ஆடினார். 52 பந்தில் கே எல் ராகுல் 63 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் அடக்கம். அதன்பின் இறங்கிய பஞ்சாப் வீரர்கள் பெரிய அளவில் ஆடாத நிலையில்.. பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 178 ரன்கள் எடுத்தது.

மோசம்

மோசம்

சிஎஸ்கே அணியின் பவுலிங்கும் இன்று சிறப்பாக இருந்தது. முக்கியமாக சர்த்துல் தாக்கூர், பிராவோ, ஜடேஜா என்று எல்லோரும் சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் தாக்கூர் அடுத்தது கே எல் ராகுல் மற்றும் பூரான் விக்கெட்டை எடுத்து போட்டியை மாற்றினார். போட்டியில் மிகப்பெரிய திருப்பமாக இந்த ஓவர் அமைந்தது.

பேட்டிங்

பேட்டிங்

அதன்பின் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே முதல் ஓவரில் இருந்து அதிரடியாக ஆடியது. முதல் பவர் பிளேவை சரியாக ஆட வேண்டும் என்று வாட்சன், டு பிளசிஸ் உறுதியாக இருந்தனர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் அடித்து வந்தனர். இதனால் 6 ஓவரில் 60 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அதிரடி காட்டியது. அதன்பின் 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது.

வெற்றி

வெற்றி

வாட்சன், டு பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். இரண்டு பேருமே மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து மாஸ் காட்டினார்கள். இதன் மூலம் சிஎஸ்கே வெறும் 17.4 ஓவரில் 181 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

காரணம்

காரணம்

சிஎஸ்கேவின் வெற்றிக்கு வீரர்கள் மீது தோனி வைத்த நம்பிக்கைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தோனியே போட்டிக்கு முன் குறிப்பிட்டு இருந்தார். நாங்கள் சேசிங் செய்வதில் அனுபவம் கொண்ட அணி. எங்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல உறவு நீடிக்க வேண்டும். இன்று அணியில் மாற்றம் எதுவும் இல்லை. அதே வீரர்கள்தான் இன்று விளையாட போகிறார்கள்.

ரூம்

ரூம்

டிரெஸ்ஸிங் ரூமில் உறவு எப்படி இருக்கிறது என்பது முக்கியம். அப்போதுதான் அணி நன்றாக இருக்கும். வீரர்களுக்கு இடையே உறவு நன்றாக இருந்தால் போட்டியும் நன்றாக இருக்கும் என்று தோனி கூறி இருந்தார். இதுதான் வீரர்கள் மீது தோனி கடுமையான நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்கிறார்கள். தோனி தனது அணி மீது நம்பிக்கை வைத்து இருந்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

முக்கியமாக வாட்சன் மீது தோனி நம்பிக்கை வைத்து இருந்தார். இரண்டு, மூன்று போட்டிகள் ஆடவில்லை என்று வாட்சனை தோனி நீக்கவில்லை. அவர் செட்டாகும் வரை தோனி டைம் கொடுத்தார். வீரர்களுக்கு ''ரிதம்'' வரும் வரை தோனி காத்து இருந்தார்... இதுதான் சிஎஸ்கே இன்று விஸ்வரூபமாக மீண்டு வர காரணம் ஆகும். தோனி வீரர்களுக்கு டைம் கொடுத்தார். வீரர்கள் தற்போது மாஸாக கம் பேக் கொடுத்துள்ளனர்.. இனிதான் இருக்கிறது சிஎஸ்கேவின் ரியல் வேட்டை!

Story first published: Sunday, October 4, 2020, 23:15 [IST]
Other articles published on Oct 4, 2020
English summary
IPL 2020: Dhoni talked about chasing way before the match against Punjab.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+