Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனி தனி பிளானோடு வந்தால் இப்படித்தான்.. பேட்டியில் போட்டு உடைத்த தோனி.. தோல்விக்கு முக்கிய காரணம்!

துபாய்: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரிடம் எளிதாக வெற்றிபெறும் சிஎஸ்கே இந்த முறை மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

நேற்று தொடக்கத்தில் சிஎஸ்கே பவுலிங் நன்றாக இருந்தாலும் போக போக ஆட்டம் கையைவிட்டு போனது. நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்றும் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. தோனி, ராயுடு உட்பட யாருமே நேற்று சரியாக பேட்டிங் செய்யவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது குறித்து தோனி கடுமையாக பேசி உள்ளார். அவர் தனது பேச்சில், எங்கள் பேட்டிங் கொஞ்சம் மோசமாக இருந்தது. 6வது ஓவர் வரை பேட்டிங் சிறப்பாக இல்லை. நாங்கள் அங்குதான் சறுக்கினோம். முதல் பவர்பிளேவில் போதுமான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை.

அழுத்தம்

அழுத்தம்

இதனால் போக போக அழுத்தம் அதிகரித்தது. வீரர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஊக்கம் அளிக்க முடியும். ஆனால் நாம் எவ்வளவு ஊக்கம் அளித்தாலும் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. வீரர்கள் தனிப்பட்ட பிளானுடன் சமயங்களில் களமிறங்குவார்கள்.

வீரர்கள் தனிப்பட்ட பிளான்

வீரர்கள் தனிப்பட்ட பிளான்

வீரர்கள் தனிப்பட்ட வகையில் செயல்படுகிறார்கள். களத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பிளான் வைத்து உள்ளனர். இங்குதான் நாங்கள் தோல்வி அடைகிறோம்.

எப்படி ஆட வேண்டும்

எப்படி ஆட வேண்டும்

எங்களிடம் 6-14வது ஓவருக்கு இடையில் எப்படி ஆட வேண்டும் என்று சரியான பிளான் இல்லை. இங்கு மோசமாக சொதப்புவது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிஎஸ்கே ஆட்டத்தில் சில குறைகள் உள்ளது. அதை வரும் நாட்களில் கண்டிப்பாக மாற்ற முயற்சி செய்வோம் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

பிளான்

பிளான்

தோனி தனது பேச்சில் வீரர்கள் தனிப்பட்ட பிளானுடன் களமிறங்கி உள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் யாரை குறிப்பிட்டுள்ளார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் நேற்று ஆடிய வாட்சன், ராயுடு இருவரும் அதிரடி ஷாட்களை ஆடாமல் பொறுமையாக டொக் வைத்து ஆடினார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஆனால் கடந்த போட்டியிலேயே சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவரில் அதிரடி காட்ட வேண்டும் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தோனியை மீறி நேற்று மிடில் ஆர்டரில் வீரர்கள் கட்டைபோட்டனர். இதைத்தான் தோனி குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.. இதைத்தான் வீரர்கள் தனிப்பட்ட பிளானுடன் வருவதாக தோனி குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

Story first published: Sunday, October 11, 2020, 8:56 [IST]
Other articles published on Oct 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+