
சிஎஸ்கே
சிஎஸ்கே அணியின் தொடர் சொதப்பலுக்கு அணி ஒவ்வோர் முறை டாஸ் தோல்வி அடைந்து சேசிங் செய்ததுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. எல்லா முறையும் சேசிங்கின் போது சிஎஸ்கேவின் பேட்டிங் மோசமாக சொதப்புகிறது. கடைசி 5 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்று சிஎஸ்கே வீரர்கள் பொறுமையாக ஆடுகிறார்கள்.

காரணம்
ஆனால் கடைசியில் அதிரடியாக ஆட முடியாமல் வீரர்கள் சொதப்பிவிட்டு அவுட்டாகி விடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே கடைசி கட்டத்தில்தான் தோல்வி அடைகிறது. கடைசி ஐந்து ஓவரில் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் சிஎஸ்கே திணறுகிறது. பினிஷிங் கிங்காக இருந்த சிஎஸ்கே இந்த முறை மிக மோசமாக திணறுகிறது.

சிஎஸ்கே தோல்வி
சிஎஸ்கே தோல்வி அடைந்த 5 போட்டிகளை எடுத்துக்கொண்டால் தெரியும். 5 போட்டியிலும் சிஎஸ்கே மிக மோசமான சேசிங் செய்துள்ளது. கடைசியில் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. எல்லாமே குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நொடியில் அடிக்க முடியாமல் தோல்வி அடைந்த மேட்ச்கள்தான்.

புள்ளி விவரம்
- ராஜஸ்தானுக்கு எதிராக முதல் 10 ஓவரில் 82 ரன்கள் எடுத்தது -- 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- டெல்லிக்கு எதிராக முதல் 10 ஓவரில் 37 ரன்கள் எடுத்தது --44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- ஹைதராபாத்திற்கு எதிராக முதல் 10 ஓவரில் 44 ரன்கள் எடுத்தது -- 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- கொல்கத்தாவிற்கு எதிராக முதல் 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்தது-- 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- பெங்களூருக்கு எதிராக முதல் 10 ஓவரில் 47 ரன்கள் எடுத்தது-- 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

மோசம்
இந்த டேட்டாவை பார்த்து தற்போது சிஎஸ்கே கலங்கி போய் உள்ளது. எல்லா போட்டியிலும் சிஎஸ்கே கடைசி ஐந்து ஓவர்களில் சரியாக ஆட முடியாமல் மிக மோசமாக தோல்வி அடைகிறது. சிஎஸ்கேவின் ஒரே பிரச்சனை தற்போது பினிஷ் செய்ய முடியாததுதான். மும்பை , ராஜஸ்தான் என்று எல்லா அணியிலும் பினிஷர்கள் உள்ள நிலையில் சிஎஸ்கே சரியான பினிஷர் இல்லாமல் கஷ்டப்படுகிறது.

தோனி
முக்கியமாக சிஎஸ்கேவில் மிடில் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் தோனியை பின்பற்றுவதும் பிரச்சனையாகி உள்ளது. அதாவது 17 ஓவர் வரை எதுவும் அடிக்காமல் அதற்கு பின் சிக்ஸ், பவுண்டரி அடித்து வின் பண்ணலாம் என்று ஜடேஜா, ஜாதவ், சாம் கரன்,ராயுடு போன்ற வீரர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் தோனியின் மாடலை பின்பற்ற நினைக்கிறார்கள். ஆனால் இவர்களால் கடைசியில் அப்படி அதிரடியாக ஆட முடியவில்லை.

காரணம்
இதுதான் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதை தோனியே அணியில் இருக்கும் வீரர்களிடம் தெரிவித்து இருக்கிறார். ஆம் தோனியே இதை கடந்த போட்டிக்கு பின் வெளிப்படையாக அறிவித்தார். அணியில் எல்லோரும் கடைசி இரண்டு ஓவரில் அடித்து வின் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால்
ஆனால் இனிமேல் அப்படி ஆட கூடாது .. மாறாக மிடில் ஓவரில் அதிரடியாக ஆட வேண்டும். கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆட கூடாது. அதிரடியாக ஆட வேண்டும், இல்லையெனில் அவுட்டாக வேண்டும் என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தோனி தன்னுடைய மாடலை பின்பற்றவேண்டாம். கடைசி வரை பொறுமையாக ஆட நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் சிஎஸ்கேவின் சேசிங் இனி வரும் போட்டிகளில் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications