Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்?

சார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்று சென்னை அணியின் கேப்டன் தோனி

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்வி பல விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக சென்னை அணியின் மோசமான் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆர்டர் அதிக விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

சென்னையில் டு பிளசிஸ் தவிர வேறு யாரும் பெரிதாக ஆடவில்லை. டு பிளசிஸ் மட்டுமே 72 ரன்கள்எடுத்தார். ஆனாலும் சென்னை 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பேட்டி

பேட்டி

சென்னையின் தோல்வி குறித்து தற்போது தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில், 217 ரன்கள் போன்ற அதிக ரன்கள் இருக்கும் போது தொடக்கமும் நன்றாக இருக்க வேண்டும். தொடக்கத்தில் பேட்டிங் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஸ்டீவ் மற்றும் சாம்சன் இருவரும் நன்றாக பேட்டிங் செய்தனர். ராஜஸ்தான் பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர்.

முதல் இன்னிங்ஸ் எப்படி

முதல் இன்னிங்ஸ் எப்படி

முதல் இன்னிங்சில் பவுலிங் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே போதும். அப்போதே பந்து எவ்வளவு லெந்தில் செல்லும் என்று தெரிந்து விடும். இதை தெரிந்து கொண்டு ராஜஸ்தான் ஸ்பின் பவுலர்கள் நன்றாக வீசினார்கள். சென்னையில் அப்படி இல்லை.

சொதப்பல்

சொதப்பல்

சென்னை ஸ்பின் பவுலர்கள் கொஞ்சம் சொதப்பி விட்டனர். அவர்கள் நிறைய தவறுகளை செய்தனர். அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால், 200 ரன்களுக்குள் ராஜஸ்தானை முடக்கி இருக்கலாம். நாங்கள் அங்கு தவறு செய்துவிட்டோம். ஆனால் போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது.

மாறிவிட்டது

மாறிவிட்டது

நேற்று சென்னை அணி வீரர்கள் அதிகம் நோ பால் போட்டுவிட்டனர். இதனால் அதிக ரன்கள் சென்றுவிட்டது. 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்து இருக்கிறோம். இடையில் கொஞ்சம் நோ பால்களை தவிர்த்து இருந்தால் அதிக ரன்கள் சென்று இருக்காது. அதுதான் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டது.

திருத்த வேண்டும்

திருத்த வேண்டும்

சில விஷயங்களை திருத்த வேண்டும். சோதனை முயற்சிகள் கைகொடுக்கவில்லை. அடுத்த போட்டியில் இதை மாற்ற வேண்டும். பவுலிங்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்., என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Wednesday, September 23, 2020, 9:25 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+