Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிபெற்றாலும்.. சில விஷயங்களை மறைக்க கூடாது.. போட்டிக்கு பின் சூசகமாக பேசிய தோனி.. என்ன நடந்தது?

துபாய்: நேற்று ஹைதராபாத்திற்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார்.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக வெற்றிபெற்றது. வரிசையாக தோல்விகளை தழுவி வந்த சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய ஹைதராபாத் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினாலும் சிஎஸ்கேவின் இலக்கை எட்ட முடியவில்லை. 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் தோல்வி அடைந்தது.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார். அதில், எங்களுக்கு 2 புள்ளிகள் பெறுவதே நோக்கமாக இருந்தது. அதை இன்று செய்துவிட்டோம். டி20 போட்டியில் சில ஆட்டங்கள் நாம் நினைத்தபடி செல்லாது. சில ஆட்டங்கள் நம் திட்டத்தின்படியே செல்லும். இன்று எங்கள் திட்டம் மிக சரியாக கை கொடுத்தது. சிஎஸ்கேவில் பேட்டிங், பவுலிங் இரண்டும் சிறப்பாக இருந்தது.

வெற்றிபெற வேண்டும்

வெற்றிபெற வேண்டும்

பேட்ஸ்மேன்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடினார்கள். 160 ரன்கள் இலக்கு இருக்கும் போது, முதல் 6 ஓவர்களை கவனமாக வீச வேண்டும். முதல் 6 ஓவர்களை எப்படி வீச போகிறோம் என்பதை பொறுத்தே ஆட்டம் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். நேற்று சிஎஸ்கே விளையாடிய ஆட்டம் கிட்டத்தட்ட முழுமையான ஆட்டமாக இருந்தது.

துபாய் பிட்ச்

துபாய் பிட்ச்

துபாய் பிட்சில் சில சமயம் பந்துகள் மிக மெதுவாக வரும். சில சமயம் பந்துகள் மிக வேகமாக வரும். சில சமயம் இங்கு பந்து ஸ்விங் ஆகிறது. சில சமயம் சுத்தமாக பந்து ஸ்விங் ஆகாமல் பவுன்ஸ் ஆகும்.எங்களுக்கு தேவை எல்லாம் ஒரே ஒரு நல்ல திட்டம் மற்றும் பவுலர்களின் ஒத்துழைப்பும் மட்டும்தான். எங்களுக்கு நேற்றைய போட்டியில் பிட்ச் சாதகமாக இருந்தது.

டெத் பவுலிங்

டெத் பவுலிங்

நாங்கள் இன்னும் நன்றாக ஆடுவோம். ஆட்டம் குறித்து இன்னும் யோசிக்க வேண்டும்.புள்ளிகள் பட்டியலை குறித்து யோசிக்க கூடாது. நாங்கள் சரியாக ஆடினால்.. எல்லாம் அதுவாக மாறும். நாங்கள் எங்கே தவறு செய்து இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஒரு போட்டியில் வென்றுவிட்டோம் என்பதற்காக சில தவறுகளை மூடி மறைக்க கூடாது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

சில தவறுகள்

சில தவறுகள்

நேற்று சிஎஸ்கே சிறப்பாக பந்து வீசினாலும் ஸ்பின் பவுலர்கள் சில தவறுகளை செய்தனர். டெத் ஓவர்களில் கொஞ்சம் ரன் சென்றது. அதேபோல் சாவ்லா அணியில் நேற்று ஏன் எடுக்கப்பட்டார் என்று சந்தேகம் எழுந்தது. அணியில் இப்படி சின்ன சின்ன தவறுகள் நடந்தது குறித்துதான் தோனி இப்படி பேசி உள்ளார். அந்த தவறுகளை சரி செய்யவே தோனி நினைக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 9:32 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+