அவருக்கு இழைக்கப்படும் அநீதி.. தமிழக வீரர் குறித்து மௌனம் கலைத்த தோனி.. முடிவிற்கு காரணம் இதுதான்!
துபாய்: நேற்று ஹைதராபாத்திற்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார்.
2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ள நிலையில் சிஎஸ்கே 3 போட்டிகளில் வென்றுள்ளது. மீதம் உள்ள 6 போட்டிகளில் 5ல் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

அழுத்தம்
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் எப்படி இருந்தது என்பது குறித்து தோனி பேட்டி அளித்துள்ளார். அதில், முதல் 6 ஓவரில் எதிரணி எப்படி ஆடுகிறது என்பதை வைத்தே திட்டங்களை நான் வகுப்பேன். 15 ஓவர்களில் என்ன இலக்கு உள்ளது என்பதை வைத்து நான் திட்டங்களை வகுப்பேன். முதல் 6 ஓவர்களில் பீல்டிங், பவுலிங் இரண்டும் நன்றாக இருக்க வேண்டும்.

பந்து வீச்சு
வேகப்பந்து வீச்சாளர்கள் மீதான அழுத்தம் நேற்று அதிகமாக இருந்தது. அவர்களின், துல்லியமான லென்தில் பந்து வீசுங்கள் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தேன். அதேபோல் அவர்கள் பந்து வீசினார்கள்.ஒரு இந்திய பேட்ஸ்மேன் எங்களுக்காக சரியாக விளையாடவில்லை. அதனால் நாங்கள் கூடுதலாக ஸ்பின் பவுலரை களமிறக்கினோம். அதனால்தான் சாம் கரனை ஓப்பனிங் இறக்கினோம்.

ஜெகதீசன் நீக்கம்
அதேபோல் அணியில் நேற்று ஜெகதீசனை எடுத்து இருந்தால் அவர் 6-7வது இடங்களில் பேட்டிங் இறங்கி இருப்பார்.அதுவும் சரியாக இருக்காது. ஜெகதீசனை அவ்வளவு கீழே பேட்டிங் செய்ய அனுப்புவது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்றுதான் சொல்வேன். அதனால்தான் அவரை எடுக்கவில்லை.

சாம் கரன் பேட்டிங்
அதேபோல் சாம் கரன் ஓப்பனிங் இறங்குவதால் வலது - இடது காம்பினேஷன் கிடைக்கிறது. சாம் கரன் முழுமையான கிரிக்கெட் வீரராக இருக்கிறார். நன்றாக பவுலிங் செய்கிறார், பேட்டிங் பீல்டிங் செய்கிறார். சிஎஸ்கேவிற்கு தேவையான 20-45 ரன்களை தேவையான நேரத்தில் வேகமாக அடித்து தருகிறார். தேவையான நேரத்தில் விக்கெட் எடுக்கிறார்.

பேட்ஸ்மேன் எப்படி
ஒரு இடதுகை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது எப்போதும் நல்ல விஷயம். தொடர் செல்ல செல்ல நாங்கள் எங்கள் டெத் ஓவர்களில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்வோம். அதேபோல் சிறப்பாக பவுலிங் செய்வோம். அதனால்தான் இன்று பிராவோவும், தாக்கூரும் டெத் பவுலிங் செய்தனர். சில தவறுகளை இனி சரி செய்வோம் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications