Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியே தெரிந்துவிட்டது.. இதேதான் மீண்டும் மீண்டும் நடக்கிறது.. தோனியா இப்படி பேசுவது.. என்ன நடந்தது?

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்த நிலையில், அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார்.

நேற்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. மற்ற போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருந்து சிஎஸ்கே தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று சிஎஸ்கேவிற்கு வெற்றிபெற கூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார். தோனி தனது பேட்டியில், கடைசி நான்கு ஓவர்களில் சிஎஸ்கே பவுலிங் செய்யும் போதுதான் எல்லாம் மாறியது. நாங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. அதற்கு முன் வீரர்கள் நன்றாகவே ஆடினார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் முதல் பாதியை முடிக்கும் போது சரியாக முடிக்கவில்லை. அங்குதான் தவறு செய்து விட்டோம். எங்கள் அணியின் பேட்டிங் சரியில்லை. இன்று அது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. இதற்காக நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்.மீண்டும் மீண்டும் களத்திற்கு வந்து தோல்வி அடைய கூடாது .

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்

இதே விஷயம்தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது. ஒருவேளை தனிப்பட்ட நபர்கள் மீது தவறு இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும். எல்லோரும் இதற்கு பொறுப்புதான். வேறு மாதிரியான ஷாட்களை தேர்வு செய்து ஆட வேண்டும்.

பிரஷர்

பிரஷர்

நாம் இனி வரும் நாட்களில் பெரிய ஷாட்களை அடித்து ஆட வேண்டும். ஏனென்றால் 15வது ஓவருக்கு பின் அதிகமாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட கூடாது. அதனால் கடைசி நேரத்தில் அதிக பிரஷர் வைக்கப்படுகிறது. கடைசியில் வரும் பேட்ஸ்மேன்கள் இதனால் அதிகமாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

தோனி தனது பேட்டியில் இரண்டு முக்கியமான விஷ்யங்களை குறிப்பிட்டுள்ளார். முதல் விஷயம் சிஎஸ்கேவின் தோல்விக்கு தனி நபர்களை குறைய சொல்ல முடியாது என்று கூறி உள்ளார். அதாவது கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை கடைசி போட்டியில் குற்றஞ்சாட்டியது போல இனிமேல் குற்றஞ்சாட்ட கூடாது என்று தோனி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இன்னொரு விஷயம்

இன்னொரு விஷயம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கேவின் பலவீனம் வெளிப்படையாக வெளியே தெரிந்துவிட்டது என்று கூறியுள்ளார். முதல் முறையாக பேட்டியில் தோனி இப்படி குறிப்பிடுகிறார். சிஎஸ்கேவின் தோல்வி குறித்து அவர் வெளிப்படையாக பேசியது இல்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது திடீர் என்று அவர் வெளிப்படையாக.. பலவீனம் தெரிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதற்கு முன் இப்படி எல்லாம் தோனி பேசியது கிடையாது. இதனால் அடுத்த போட்டியில் அவர் என்ன செய்வார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 21:09 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+