Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மொத்தமாக கைவிட்டுவிட்டனர்".. பெயரை கூட சொல்ல மறுத்த தோனி.. சிஎஸ்கே மேட்சிற்கு பின் பரபர பேட்டி!

துபாய்: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டி பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது. பஞ்சாப்பிற்கு எதிராக வெற்றிபெற்று நம்பிக்கை அளித்த சிஎஸ்கே கொல்கத்தாவிடம் மோசமாக தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் களமிறங்கிய கொல்கத்தா 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்த எளிதான ஸ்கோரை கூட எடுக்க முடியாமல் திணறிய சிஎஸ்கே 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பேட்டி

பேட்டி

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார். இந்த பேட்டியில், போட்டியின் மத்தியில் சிஎஸ்கே பேட்டிங் செய்யும் போது ஆட்டம் எங்கள் கை விட்டு சென்றுவிட்டது. அப்போது கொல்கத்தா அணி சில நல்ல ஓவர்களை வீசியது. அவர்கள் வீசிய 2-3 நல்ல ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த நேரத்தில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து இருக்க வேண்டும்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

நாங்கள் 2-3 விக்கெட்டுகளை அந்த நேரத்தில் இழந்து இருக்க கூடாது. வரிசையாக அப்போது விக்கெட் விழுந்துவிட்டது. 5-6 ஓவர்களில் போட்டியே மாறிவிட்டது. நாங்கள் அப்போது கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். சாம் கரன் நன்றாக பேட்டிங் செய்கிறார். சிஎஸ்கே பவுலிங் நன்றாக இருந்தது.

கைவிட்டுவிட்டனர்

கைவிட்டுவிட்டனர்

ஆனால் பேட்ஸ்மேன்கள்தான் அணியை மொத்தமாக கைவிட்டுவிட்டனர். ஸ்டிரைக் ரொட்டேஷன் செய்வது முக்கியம்தான். ஆனால் அதே சமயம் கடைசி கட்டத்தில் சரியாக பவுண்டரி செல்லவில்லை. அதுவும் முக்கிய காரணம் ஆகும். கடைசி கட்டத்தில் கொஞ்சம் அறிவுபூர்வமாக நாங்கள் செயல்பட்டு இருக்க வேண்டும்.

சரியாக பேட்டிங் செய்ய வேண்டும்

சரியாக பேட்டிங் செய்ய வேண்டும்

சரியான லென்த்தில் கொல்கத்தா பவுலர்கள் பந்து வீசினார்கள். அது போன்ற இடங்களில்தான் நாங்கள் சரியாக பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அதை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். அங்குதான் நாங்கள் சொதப்பிவிட்டோம் என்று,தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜாதவ்

ஜாதவ்

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தோனி, ஜாதவ் இருவரும் பார்க்கப்படுகிறார்கள். ஜாதவ் பேட்டிங் செய்ய வந்த போது சிஎஸ்கே 21 பந்தில் 39 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். தோனியும் 12 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

பிரஸ் மீட்டில் சொல்லவில்லை

பிரஸ் மீட்டில் சொல்லவில்லை

இவர்கள் இருவரும்தான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால் ஜாதவ் பெயரை கூட தோனி பிரஸ் மீட்டில் குறிப்பிடவில்லை. மேம்போக்காக யாரையும் குற்றஞ்சாட்டாமல் தோனி பேட்டி அளித்தது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.கேதார் ஜாதவை தோனி ஏன் இப்படி சப்போர்ட் செய்கிறார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 8, 2020, 8:45 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+