Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரொம்ப ரிலாக்சாக இருந்தால் இப்படித்தான்".. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?.. தோனி பரபரப்பு விளக்கம்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்று சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. சென்னை அணியின் பேட்டிங் இந்த முறையும் மோசமாக சொதப்பியது.

குறைந்த டார்க்கெட்டே இருந்தாலும் கூட சென்னை அணியின் ஒப்பனர்கள் மிக மோசமாக சொதப்பினார்கள். இதனால் மொத்தமாக ஆட்டம் கையைவிட்டு போனது.

போராட்டம்

போராட்டம்

கடைசியில் தோனி ஜடேஜா போராடியும் பலன் இல்லாமல் போய்விட்டது. நேற்று இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் ஹைதராபாத் நேற்று 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை கடைசி வரை போராடி 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

காரணம் என்ன

காரணம் என்ன

நேற்று சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்று தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில், நேற்று வீரர்கள் போட்டியின் நடுவே மேம்போக்காக இருந்துவிட்டனர். ஆட்டம் கட்டுக்குள் வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டனர். நேற்று அதுதான் பிரச்சனையாக இருந்தது. பல நாட்களுக்கு முன் இதேபோல் நாங்கள் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இருக்கிறோம்.

ரிலாக்ஸ்

ரிலாக்ஸ்

நிறைய விஷயங்களை நாங்கள் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிரிக்கெட் ஆடும் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். நோ பால் போடாமல் இருக்கவும், சரியாக கேட்ச் பிடிக்கவும் பயிற்சி எடுக்க வேண்டும். வீரர்கள் சிலர் ரொம்ப ரிலாக்ஸ்சாக இருப்பதும் கூடாது காரணம் என்று கூறலாம்.

தவறு செய்துவிட்டோம்

தவறு செய்துவிட்டோம்

சில இடங்களில் நாங்கள் மிகவும் ரிலாக்சாக இருந்துவிட்டோம். 16வது ஓவருக்கு பின் நாங்கள் நன்றாகவே ஓவர் செய்தோம். ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசி இருக்கலாம். எங்கள் அணியில் சிலர் கேட்ச் விட்டு இருக்க கூடாது. எங்கள் அணி இப்போது மிக சிறப்பான அணியாக இல்லை.

நிறைய விஷயம்

நிறைய விஷயம்

அப்படி இருக்கையில் முடிந்த அளவு எல்லோரும் நன்றாக ஆட வேண்டும். இந்த போட்டியில் நிறைய விஷ்யங்கள் நடந்துள்ளது. சில பாசிட்டிவ் விஷயங்களும் நடந்தது. எல்லோரும் தங்களின் பெஸ்டை கொடுக்க வேண்டும்.அடுத்த போட்டியில் கண்டிப்பாக நாங்கள் வலுவாக திரும்பி வருவோம், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, October 3, 2020, 9:03 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+