Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சீண்டியது ஜெகதீசனை அல்ல.. ஜாதவை.. சிஎஸ்கே அணிக்குள் நடப்பது என்ன?.. வெளியாகும் உண்மைகள்!

துபாய்: சிஎஸ்கே அணியில் இளைஞர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியது குறித்து முன்னாள் கிரிக்கெட் பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார்.

தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய் உள்ளது. எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற சிஎஸ்கே இந்த வருடம் பிளே ஆப் செல்வது சந்தேகம் ஆகியுள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே மொத்தம் 3 போட்டிகளில் மட்டும் வெற்றி அடைந்துள்ளது. இதனால் மீதம் இருக்கும் போட்டிகளில் வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்வது கடினம்தான்.

என்ன

என்ன

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் தோனி பேசினார். இதில் தோனி பேசிய சில விஷயங்கள் சர்ச்சையானது. அவர் தனது பேச்சில், சிஎஸ்கே அணிக்குள் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தோம்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் அவர்களை அணியில் எடுக்க முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். அவர்கள் இனி வரும் போட்டிகளில் டென்ஷன் இல்லாமல் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்று தோனி கூறியிருந்தார்.

திறமை

திறமை

இளைஞர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியது குறித்து முன்னாள் கிரிக்கெட் பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணியில் இளைஞர்களுக்கு எதிராக தோனி பேசவில்லை. தோனி பேசியது முழுக்க முழுக்க ஜாதவிற்கு எதிராக மட்டுமே. இளைஞர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஸ்பார்க் இருப்பதாக கருதி வாய்ப்பு கொடுத்த ஜாதவ் ஏமாற்றிவிட்டார். இதைத்தான் தோனி மறைமுகமாக சாடி உள்ளார். ஜாதவ் மீது இருந்த கோபத்தை தோனி இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார். ஜாதவ் சீண்டியது ஜெகதீசனை அல்ல ஜாதவை. தோனி எப்போதும் இளம் வீரர்களை இப்படி பேச மாட்டார். அவர் இளைஞர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

தோனி பேசவில்லை

தோனி பேசவில்லை

தோனி ஜெகதீசனை பற்றி பேசவில்லை. தோனி பேசியது ஜாதவை பற்றி. சிஎஸ்கே அணிக்குள் நிறைய விஷயங்கள் நடக்கிறது. ஜாதவ், பியூஸ் சாவ்லா ஆட்டத்தை பார்த்து தோனி ஏமாந்து விட்டார். இவர்களை பற்றி தோனி வெளிப்படையாக பேசவில்லை. மறைமுகமாக தோனி பேசியுள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் இனி இளைஞர்கள் மட்டுமே ஆடுவார்கள்.

தவறு

தவறு

சிஎஸ்கே அணிக்குள் நிறைய விஷயங்கள் நடக்கிறது, விரைவில் எல்லாம் வெளியே வரும், அணிக்குள் அடுத்த போட்டியில் நிறைய மாற்றங்கள் வரும், தோனி ஜெகதீசன் பற்றி பேசி இருக்க மாட்டார். அவர் ஜாதவை பற்றித்தான் பேசி உள்ளார். ஆனால் தோனி ஜெகதீசனை பற்றி பேசி இருந்தால் அது தவறு. ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்துவிட்டு, அவர்களை பற்றி பேசுவது தவறு, என்று பிரக்யான் ஓஜா பேசியுள்ளார்.

Story first published: Wednesday, October 21, 2020, 8:35 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+