நீங்கதான் இனி ஓப்பனிங்.. மொத்தமாக திட்டத்தை மாற்றிய தோனி.. சிஎஸ்கேவில் நடக்க போகும் பெரிய மாற்றம்!
துபாய்: சென்னை அணியில் ஓப்பனிங் வீரர் முரளி விஜய் மோசமாக சொதப்பி வருவதால், அடுத்த போட்டியில் யார் ஓப்பனிங் இறங்குவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் தோனி இதற்காக சிலரை மனதில் வைத்துள்ளார் என்று கூறுகிறார்கள் .
சென்னை அணி அடுத்தடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்து உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
ஓப்பனிங் வீரர்கள் முரளி விஜய் மற்றும் வாட்சன் இருவரும் சரியாக ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று போட்டிகளாகவே இவர்கள் இருவரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

வாட்சன் மாற்றம்
பொதுவாக ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சில போட்டிகளில் வாட்சன் திணறுவது வழக்கம். ஆனால் போக போக இவர் பார்மிற்கு திரும்புவார். தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை என்றாலும் தொடரின் பின் பாதியில் இவர் மாஸ் காட்டுவார். அதேபோல் பிளே ஆப் போட்டிகளில் அணிக்கு கை கொடுப்பார்.

ஆனால் என்ன
ஆனால் இன்னொரு பக்கம் முரளி விஜய் மோசமாக ஆடி வருகிறார். ரெய்னா இல்லாத காரணத்தால் டு பிளசிஸ் இடத்தில் முரளி விஜய் இறங்குகிறார். ரெய்னா இடத்தில் டு பிளசிஸ் இறங்குகிறார். ஓப்பனிங் இறங்கியும் கூட ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இருந்தே விஜய் மோசமாக சொதப்பி வருகிறார்.

டெஸ்ட்
மிகவும் மெதுவாக ஆடுகிறார் என்று இவர் மீது புகார் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது போல இவர் ஆடுகிறார். மற்ற அணிகளில் ஓப்பனிங் வீரர்கள் அதிரடி காட்டுகிறார்கள். ஆனால் சிஎஸ்கேவில் மட்டும் முரளி விஜய் போன்ற வீரர்கள் ஓப்பனிங் இறங்கி ஆட்டத்தையே காலி செய்கிறார்கள் என்று புகார் உள்ளது.

யார் ஓப்பனிங்
இதனால் சென்னை அணியில் அடுத்த போட்டியில் கண்டிப்பாக முரளி விஜய் இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒன் டவுன் ஆட வலுவான வீரர் தேவை என்பதால் டு பிளசிஸும் ஓப்பனிங் இறங்க மாட்டார். இதனால் சென்னை அணி புதிய சில வீரர்களை ஓப்பனிங் இறக்கி சோதனை செய்ய உள்ளது.

முதலில் யார்
அதன்படி ராயுடு சென்னை அணியில் ஓப்பனிங் இறக்க வாய்ப்புள்ளது. இவர் ஓப்பனிங் இறங்கினால் அதிரடியாக ஆடுவார். இதனால் இன்னொரு பக்கம் வாட்சன் பொறுமையாக செட் ஆக வசதியாக இருக்கும். இது வாட்சன் டென்ஷன் இல்லாமல் ஆடுவதற்கு வசதியாக இருக்கும்.

ஓப்பனிங்
அதேபோல் ராயுடுவும் ஓப்பனிங் இறங்கும் திறமை கொண்டவர். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் தற்போது குணமடைந்து உள்ளார்.இவர் அடுத்த போட்டியில் ஆடுவது உறுதியாகி உள்ளது. இதனால் இவர் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது.

ரூத்து ராஜ்
அதேபோல் சமயத்தில் அம்பதி ராயுடு ஓப்பனிங் இறங்கினால் மிடில் ஆர்டர் சரிய வாய்ப்புள்ளது. இதனால் அம்பதி ராயுடு இல்லையென்றால் ரூத்து ராஜ் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ரூத்து ராஜ் வாட்சன் இருவரும் ஓப்பனிங் இறங்கலாம். டு பிளசிஸ் ஒன் டவுன் இறங்கி, பின் அம்பதி ராயுடு பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ராயுடு பேட்டிங்
ரூத்துராஜ் கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. ஆனால் அவரின் பேட்டிங் ஸ்டைல் மோசமாக இல்லை. இதனால் இவரை ஓப்பனிங் இறக்கி சோதனை செய்ய தோனி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். சிஎஸ்கே அடுத்த போட்டியில் கண்டிப்பாக வேறு மாதிரி இருக்கும், தோனி நிறைய மாற்றங்களை செய்ய போகிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications