Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோவ் சும்மா கதை சொல்ல வேணாம்.. ஜாதவிடம் ஸ்பார்க் இருந்ததா? தோனியை விட்டு விளாசி தள்ளிய ஸ்ரீகாந்த்!

துபாய்: சிஎஸ்கே அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் தோனி கூறிய கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

சிஎஸ்கே அணி நேற்று ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த பின் கேப்டன் தோனி பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. சிஎஸ்கே அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து தோனி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வெறும் 125 ரன்கள் எடுத்தது. இதை எளிதாக சேசிங் செய்த ராஜஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பேசினார்

பேசினார்

இதற்கு பின் பேசிய தோனி, அணியில் இதற்கு முன் சில இளைஞர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அவர்களிடம் எங்களால் ஸ்பார்க்கை பார்க்க முடியவில்லை.இளைஞர்களிடம் வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு ஸ்பார்க் இல்லை. இதனால் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் தற்போது வந்திருக்கும் முடிவுகளின்படி பார்த்தால், அணியில் இருக்கும் இளைஞர்களுக்கு மீதம் இருக்கும் போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது இளைஞர்கள் மீது அணியில் எந்த பிரஷரும் இல்லை. இதனால் அவர்கள் மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்பப்படி ஆட முடியும். என்று குறிப்பிட்டு இருந்தார். தோனியின் இந்த பேச்சை முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பேச்சில் , தோனி சொன்னதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். ப்ராசஸ், ப்ராசஸ் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.தோனி சொல்லும் பொடலங்கா கதையை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சும்மா கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார் தோனி.

ப்ராசஸ்

ப்ராசஸ்

யோவ் ப்ராசஸ், ப்ராசஸ் என்று கூறும் நீங்கள் செய்யும் அணி தேர்வே தவறு. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறுகிறார். ஜெகதீசனிடம் ஸ்பார்க் இல்லையா? ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்தான் ஜாதவிடம் இருக்கிறதா?

தவறான கருத்து

தவறான கருத்து

கமான்.. இது தவறான கருத்து. ப்ராசஸ், ப்ராசஸ் என்று கூறி மொத்த தொடரும் முடிய போகிறது. இனிமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று தோனி கூறுகிறார். இனிமேல் இளைஞர்களுக்கு ஸ்பார்க் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று தோனி கூறி இருக்கிறார்.

ஜெகதீசன்

ஜெகதீசன்

ஆனால் இதற்கு முன்பே ஜெகதீசன் நன்றாகத்தான் ஆடினார். இது எதுவும் எனக்கு புரியவில்லை. ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவிடம் இருக்கிறதா? இல்லை பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறதா?, என்று கடுமையாக கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

ஸ்ரீகாந்த் செய்திருக்கும் விமர்சனம் கடுமையாக இருந்தாலும் கூட பலரும் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தோனி பேசியது தவறு. இளைஞர்களுக்கு சரியாக வாய்ப்பு கொடுக்காமல், அவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறு என்று பலரும் தோனியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, October 20, 2020, 8:29 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+