Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா முடிவால் ஏமாற்றம் அடைந்தேன்.. கோபம் வந்தது.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி..பின்னணி

துபாய்: ரோஹித் சர்மா எடுத்த முடிவு ஒன்றால் தான் கோபம் அடைந்ததாகவும், ஏமாற்றம் அடைந்ததாகவும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார்.

இன்று மும்பை அணிக்கும் கொல்கத்தாவிற்கும் இடையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டி அதிக கவனம்பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக் கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம், அவருக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையில் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு வருடங்கள் முன் நடந்த சம்பவம் ஒன்றை தினேஷ் கார்த்திக் நினைவு கூர்ந்து தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

நிதாஸ் கோப்பை

நிதாஸ் கோப்பை

வங்கதேசம், இந்தியா, இலங்கை இடையே 2018ல் நிதாஸ் கோப்பை தொடர் நடைபெற்றது. மூன்று அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்கதேசம் அணி வீரர்கள் நடந்து கொண்டு விதம் பெரிய அளவில் சர்ச்சையானது. அதிலும் வங்கதேச வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடி எதிரணி வீரர்களை சீண்டியது பெரிய சர்ச்சையானது .

பைனல்ஸ்

பைனல்ஸ்

இந்த தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தேர்வானது. 20 -20 தொடரான இதில் இறுதி போட்டியில் வங்கதேசம் 166 ரன்கள் அடித்தது. அதன்பின் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் மோசமாக சொதப்பியது. தினேஷ் கார்த்திக் களமிறங்கி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை மீட்டார். இதில் இந்தியா 168 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று, கோப்பையை வென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கு முன்பாக விஜய் சங்கர் களமிறங்கியதுதான் பெரிய அளவில் சர்ச்சையானது. விஜய் சங்கர் களமிறங்கி மிகவும் மெதுவாக ஆடி இந்திய அணியை தோல்வியின் நுனி வரை கொண்டு சென்றார். விஜய் சங்கர் இப்படி செய்ததுதான் பெரிய அளவில் சர்ச்சையானது. அதன்பின் அணியை மீட்ட தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸ் , 2 பவுண்டரியோடு கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

பேட்டி

பேட்டி

இதற்காக என்னை தயார்படுத்தி வந்தேன். ஆனால் எனக்கு முன்பாக திடீர் என்று விஜய் சங்கரை ரோஹித் சர்மா களமிறக்கினார். அந்த நேரத்தில் எனக்கு அதிர்ச்சியாக, ஏமாற்றமாக இருந்தது. எனக்கு கோபமாக வந்தது. ஆனால் நான் கேப்டனை கேள்வி எழுப்ப முடியாது. அதனால் ரோஹித்திடம் எதுவும் கேட்கவில்லை. ரோஹித்திற்கு மனதில் ஏதாவது திட்டமும் இருக்கும் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

நம்பிக்கை

நம்பிக்கை

இதற்காக என்னை தயார்படுத்தி வந்தேன். ஆனால் எனக்கு முன்பாக திடீர் என்று விஜய் சங்கரை ரோஹித் சர்மா களமிறங்கினார். அந்த நேரத்தில் எனக்கு அதிர்ச்சியாக, ஏமாற்றமாக இருந்தது. எனக்கு கோபமாக வந்தது. ஆனால் நான் கேப்டனை கேள்வி எழுப்ப முடியாது. அதனால் ரோஹித்திடம் எதுவும் கேட்கவில்லை. ரோஹித்திற்கு மனதில் ஏதாவது திட்டமும் இருக்கும் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

இழக்க எதுவும் இல்லை

இழக்க எதுவும் இல்லை

எனக்கு இழக்க எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கையில் இழக்க எதுவும் இல்லாத போது நீங்கள் எதையும் துணிச்சலாக செய்வீர்கள். அப்போதுதான் அதிசயம் நடக்கும். புதிய விஷயங்களை சாதிப்பீர்கள். அப்படிதான் நானும் அன்று ஆடினேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன், என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

முடிவு

முடிவு

ரோஹித் சர்மாவின் முடிவை தினேஷ் கார்த்திக் இப்படி விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மும்பை - கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இன்று மோதல் நடக்க உள்ள நிலையில் ரோஹித் சர்மா குறித்து தினேஷ் கார்த்திக் இப்படி பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது.

Story first published: Friday, October 16, 2020, 20:12 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+