Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தமிழில் பேசினால் அவ்வளவுதான்".. முக்கிய சிக்கலில் மாட்டிய தினேஷ் கார்த்திக்.. இன்று என்ன நடக்கும்?

துபாய்: இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் தமிழில் பேச முடியாத சூழ்நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கடைசி இடத்தில் உள்ளது.

இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியும் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசி போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்திய கொல்கத்தா அதே வெற்றியை பஞ்சாப்பிற்கு எதிராகவும் தொடர முடிவு செய்துள்ளது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

பொதுவாக கொல்கத்தா அணி ஆடும் போட்டிகளில் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது வழக்கம். தமிழக வீரர் சக்ரவர்த்தி பேட்டிங் செய்யும் போது தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது வழக்கம். பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பவுலிங் செய்ய வேண்டும், எப்போது ஸ்லோ பால் போட வேண்டும் என்று இவர் பின்பக்கத்தில் இருந்து தமிழில் பேசுவார்.

தமிழில் பேசுவார்

தமிழில் பேசுவார்

அதேபோல் கடந்த போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுக்க தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். முதல் இரண்டு பந்துகளை வெளியே போடு.. அதன்பின் உள்ளே பவுலிங் போடு, என்று தமிழில் விளக்கம் அளித்தார். தினேஷ் கார்த்திக் சொன்னது போல சக்ரவர்த்தி மூன்றாவது பந்தை உள்ளே வீசினார். இதில் தோனி அவுட்டானார்.

வியூகம்

வியூகம்

மற்ற போட்டிகளிலும் இதேபோல் தினேஷ் கார்த்திக் சக்ரவர்த்தியிடம் தமிழில் பேசி விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று பஞ்சாப்பிற்கு எதிராக நடக்கும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேச முடியாத நிலையில் இருக்கிறார். இன்று பஞ்சாப் அணியில் ஆடும் பெரும்பாலான வீரர்களுக்கு தமிழ் புரியும் என்பதால் அவரால் பெரிய அளவில் தமிழில் திட்டங்களை சத்தமாக தெரிவிக்க முடியாது.

கே.எல் ராகுல்

கே.எல் ராகுல்

இன்று பஞ்சாப் அணியில் ஆடும் கே. எல் ராகுல் தமிழில் பேச கூடியவர். அதேபோல் கருண் நாயர் அணியில் இருந்தால், அவருக்கும் தமிழ் தெரியும். இதெல்லாம் போக மயங்க் அகர்வாலுக்கு தமிழ் பேச தெரியாது என்றாலும் தமிழ் புரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் கர்நாடக வீரர் கெளதமிற்கும் தமிழ் புரியும். தமிழக வீரர் முருகன் அஸ்வினும் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார்.

முடியாது

முடியாது

இதனால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது திட்டங்களை வெளிப்படையாக தமிழில் தெரிவிக்க முடியாது. வெளிப்படையாக இப்படி போடு , அப்படி போடு , உள்ளே பந்தை வீசு என்று தெரிவிக்க முடியாது. கடந்த சிஎஸ்கே போட்டியில் அம்பதி ராயுடு பேட்டிங் செய்ய வந்த போது அவருக்கு தமிழ் தெரியுமென்பதால் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவதை தவிர்த்தார்.. அதேபோல் இன்றும் தினேஷ் கார்த்திக் தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 10, 2020, 14:18 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+