Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுக்கும் சான்ஸ் இல்லை... 4 பேருக்கு அப்பறம்தான் நீங்க.. தினேஷ் கார்த்திக்கிற்கு இப்படி ஒரு நிலையா?

துபாய்: ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பி வரும் தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

2020 ஐபிஎல் தொடர் பல வீரர்களுக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது. வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், சைனி போன்ற வீரர்களுக்கு இந்த சீசன் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

இன்னொரு பக்கம் தினேஷ் கார்த்திக், தோனி, ரஹானே, ஜாதவ் போன்ற வீரர்களுக்கு இந்த தொடர் மிக மோசமாக மாறியுள்ளது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அதிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த தொடர் மிக மோசமாக சரிவை தந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய தினேஷ் கார்த்திக் வெறும் இரண்டு போட்டியில் மட்டுமே 25 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். மற்ற போட்டிகளில் எல்லாம் மிக மோசமாக ஆடி ஒன்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார்.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

அதிலும் நேற்று நடந்த மிக முக்கியமான போட்டியில் டக் அவுட் ஆனார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு கேப்டன் பதவியை துறந்தார். ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் தினேஷ் கார்த்திக் இன்னும் மோசமாக ஆடி உள்ளார்.

மோசம்

மோசம்

இவர் கேப்டன் பதவியை துறந்த பின் ஆடிய போட்டிகளில் 4, 29, 3, 4, 0 என்று மிக மோசமான ஸ்கோர் எடுத்துள்ளார். அதிலும் கொல்கத்தா அணி கட்டாயமாக ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட தினேஷ் கார்த்திக் மோசமாக சொதப்பி அவுட்டாகி உள்ளார் .

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின்பும் கூட தினேஷ் கார்த்திக்கால் சரியாக ஆட முடியவில்லை.

தோல்வி

தோல்வி

இப்படி இவர் வரிசையாக சொதப்பிய நிலையில் தற்போது இந்திய அணியிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் ஒருநாள், டி 20 அணி எதிலும் தினேஷ் காரத்திற்கு வாய்ப்பு இல்லை. இந்திய அணியில் இந்த முறை கே . எல் ராகுல், பண்ட், சாகா, சஞ்சு சாம்சன் ஆகியோர் கீப்பர்களாக தேர்வாகி உள்ளனர்.

எப்படி வருவார்

எப்படி வருவார்

எப்போது குறைந்த பட்சம் 15 பேர் கொண்ட பட்டியலில் தினேஷ் கார்த்திக் வருவார். ஆனால் இந்த முறை அதிலும் கூட தினேஷ் கார்த்திக் வரவில்லை. மாறாக சஞ்சு சாம்சன் தினேஷ் கார்த்திக்கின் இடத்தை பிடித்துள்ளார். இதனால் மொத்தமாக தினேஷ் கார்த்திக்கின் எதிர்காலம் இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏன் கேள்வி

ஏன் கேள்வி

பெரும்பாலும் இப்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அணிதான் இனிவரும் போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடும். இவர்களை பெரும்பாலும் மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. 2021 டி 20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் இந்த டீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . இதனால் இந்திய அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, October 27, 2020, 13:35 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+