Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 வருட ஏக்கம்.. தலையில் கை வைத்த ஷாருக்.. தோனியை மிரள வைத்த தினேஷ் கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்!

அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் தோனியே மிரண்டு போகும் அளவிற்கு கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நேற்று மாஸ்டர் பிளான் ஒன்றை களமிறக்கி உள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா மோதும் வரை, சிஎஸ்கேதான் வெற்றிபெற போகிறது என்று எல்லோரும் கணிப்புகளை வெளியிட்டு இருந்தனர். பிரைன் லாரா போன்ற ஜாம்பவான்கள் கூட சிஎஸ்கேவின் வெற்றியை கணித்து இருந்தனர்.

அதேபோல் நேற்று போட்டியின் முதல் பாதியிலும் சிஎஸ்கேவின் பவுலர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். கொல்கத்தாவின் வலுவான பேட்டிங் ஆர்டரை கட்டுப்படுத்தி அந்த அணியை சிஎஸ்கே பவுலர்கள் 167 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டிக்கு முன்பு வரை தினேஷ் கார்த்திக் கேப்டன்சி மீது எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது. இவரின் கேப்டன்சி மிக மோசம். இவர் பேட்டிங், பவுலிங் கொடுக்கும் ஆர்டர் மோசமாக உள்ளது. உடனே இவரை நீக்கிவிட்டு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் மீது ஷாருக்கானும் சந்தேகத்தில்தான் இருந்தார்.

நேற்று என்ன

நேற்று என்ன

ஆனால் நேற்று தினேஷ் கார்த்திக் வித்தியாசமான இரண்டு பிளான்களுடன் களத்திற்கு வந்தார். பிளான் 1 - வித்தியாசமான பேட்டிங் ஆர்டர். பிளான் 2 - வித்தியாசமான பவுலிங் ஆர்டர். இதில் பிளான் 1 பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். நரேன் எப்படியும் ஓப்பனிங் இறங்க மாட்டார் என்றுதான் எல்லோரும் கணித்து இருந்தனர். அதேபோல் நேற்று சுப்மான் கில் உடன் ராகுல் திரிபாதிதான் ஓப்பனிங் இறங்கினார்.

யார்

யார்

அதேபோல் ஓப்பனிங் போட்டியிலேயே ராகுல் திரிப்பாதி தனது திறமையை நிரூபித்தார். அதற்கும் அடுத்து ராணா, நரேன், இயான் மோர்கன், ரசல், தினேஷ் கார்த்திக் என்று வித்தியாசமான , வலுவான பேட்டிங் ஆர்டரை தினேஷ் கார்த்திக் அனுப்பினார். ஆனால் இது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பிளான் 2ஐ தினேஷ் கார்த்திக் களமிறக்கினார்.

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங் செய்த போது வாட்சன் விக்கெட்டை தூக்க நரேனை தினேஷ் கார்த்திக் அனுப்புவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் 11 ஓவர் வரை நரேன் ஓவர் செய்யவில்லை. அதேபோல் ரசலும் ஓவர் செய்யவில்லை. முதல் 10 ஓவரில் சிஎஸ்கே சிறப்பாக பேட்டிங் செய்தது. அப்போதுதான் சரியாக வருண் சக்ரவர்த்தி - நரேன் இருவரையும் மாற்றி மாற்றி தினேஷ் கார்த்திக் பவுலிங் செய்ய வைத்தார்.

ரன்

ரன்

களத்தில் வாட்சன், தோனி இருவரும் இருந்தனர். இரண்டு பேருமே ஸ்பின் பவுலர்களின் பந்துகளில் சரியாக ஆட மாட்டார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் மாறி மாறி ஸ்பின் பவுலர்கள் போட்ட ஓவரால் மொத்தமாக சிஎஸ்கே ரன் ரேட் படுத்தது. அப்போதுதான் நினைத்தபடி வாட்சன் விக்கெட்டை நரேன் எடுத்தார். இன்னொரு பக்கம் தோனி விக்கெட்டை சக்ரவர்த்தி எடுத்தார். மொத்தமாக இந்த புள்ளியில் ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

யார்

யார்

சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் மீடியம் பார்ஸ்ட் பவுலிங்கிற்கு திணறும் என்று தினேஷ் காரத்திற்கும் தெரியும். அதேபோல் ஸ்பின் பவுலிங்கிலும் சிஎஸ்கே மிடில் ஆர்டர் திணறுகிறது. இதனால் கடைசி 10 ஓவர்களை சக்ரவர்த்தி, நரேன், ரசல் மட்டுமே வீசினார்கள். 15 ஓவர்கள் வரை சிஎஸ்கே வெல்ல போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். கொல்கத்தா அணியின் ஓனர் ஷாருக்கான் கூட தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் 15 ஓவருக்கு பின் ரசல் போட தொடங்கிய பின் போட்டியே மாறியது. ரசல் ஓவரில் பந்துகளை தொட முடியாமல் சிஎஸ்கே திணறியது. ''என்ன வேணா பண்ணு ஜாதவ் விக்கெட்டை மட்டுமே எடுத்துடாத'' என்பது போலதான் ரசல் பவுலிங் இருந்தது. ரசல் ஓவரில் ஜாதவ் வைத்த மூன்ற டாட் பால்தான் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. கடைசியில் இப்படி முக்கிய இரண்டு பவுலர்களை தினேஷ் கார்த்திக் இறக்குவார் என்று யாரும் நினைக்கவில்லை.

நினைக்கவில்லை

நினைக்கவில்லை

பொதுவாக கேப்டன்கள் மிடில் ஓவரில் விக்கெட் எடுக்க பார்ப்பார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் ரன் செல்வதை கட்டுப்படுத்தி சிஎஸ்கேவிற்கு பிரஷர் கொடுத்தார். விக்கெட் எடுப்பதை விட ரன் செல்வதை கட்டுப்படுத்துவதே மேல் என்று தினேஷ் கார்த்திக் திட்டம் போட்டார். இதனால்தான் ரசலை கடைசியில் கொண்டு வந்தார். கை மேல் பலன் கிடைத்தது. தோனியே தினேஷ் கார்த்திக்கின் இந்த பிளானை பார்த்து நேற்று ஒரு நிமிடம் மிரண்டு போனார்.

மோசம்

மோசம்

2007ல் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கு கிடைத்தது. ஆனால் கடைசியில் தோனி கேப்டன் ஆனார். அதன்பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டார். இந்த 13 வருட ஏக்கத்திற்கும் கடந்த இரண்டு வாரமாக தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார்.. இவரின் கேப்டன்சிக்கு எதிராக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தற்போது மாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Thursday, October 8, 2020, 9:30 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+