Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க 5 பேரை பாருங்க.. தினேஷ் கார்த்திக் பிளானை காலி செய்த குரூப்.. அவ்வளவுதான்.. எல்லாம் முடிந்தது!

துபாய்: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பெறுவது கிட்டத்தட்ட கனவாக மாறியுள்ளது.

இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்ப போகும் ஆள் யார் என்பது தொடர்பான விவாதங்கள் வலுவாகி உள்ளது. கடந்த சில வாரங்கள் முன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தோனியின் ஓய்விற்கு பின் இந்திய அணி முதல்முறையாக ஒருநாள் தொடரில் வரும் டிசம்பர் மாதம் ஆட உள்ளது. டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா இந்தியா இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்தான் சீனியாரிட்டி அடிப்படையில் தோனியின் இடத்தை நிரப்பி இருக்க வேண்டும். அதோடு முதல் தர போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடி வருவதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தோனியின் இடத்தை நிரப்ப தினேஷ் கார்த்திக் கடந்த சில வருடங்களாக கடுமையாக திட்டமிட்டு உழைத்து வந்தார்.

வெளியேறினார்

வெளியேறினார்

இதனால்தான் தனக்கு விருப்பமாக கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை கூட தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்தார்.தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி மீண்டும் இந்திய அணிக்குள் வரலாம் என்று நினைத்தார். 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் எப்படியாவது இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதில் தினேஷ் கார்த்திக் உறுதியாக இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தினேஷ் கார்த்திக் கனவை 5 இளம் வீரர்கள் கலைத்து உள்ளனர். கே. எல் ராகுல், சஞ்சு சாம்சன்,சாகா, இஷான் கிஷான், ரிஷப் பண்ட் ஆகியோர் கிட்டத்தட்ட தினேஷ் கார்த்திக்கின் கனவை காலி செய்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். இந்த 5 வீரர்களும் முதல் தர போட்டிகளில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதேபோல் இவர்கள் நான்கு பேருமே ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த வருடம் அதிகம் ரன் அடித்த வீரர் கே.எல் ராகுல்தான் முதல் இடம். அடுத்து இஷான் கிஷான் தொடர்ந்து மும்பை அணியில் நன்றாக ஆடி வருகிறார். பண்ட், சஞ்சு சாம்சன் சில போட்டிகளில் சொதப்பினாலும் கூட தினேஷ் கார்த்திகை விட அதிக ரன்கள் அடித்துள்ளனர். அதிலும் இன்னொரு பக்கம் சாகா தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பை நிரூபித்து உள்ளார். தினேஷ் கார்த்திக் மட்டுமே பெரிய அதிரடி ஆட்டம் எதையும் ஆட முடியாமல் திணறி வருகிறார்.

முடிந்தது

முடிந்தது

இதனால்தான் இந்த முறை இந்திய அணியில் சஞ்சு, பண்ட், ராகுல், சாகா தேர்வாகி உள்ளனர். முதலில் தோனியிடம் தனது கீப்பர் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் இழந்தார். தற்போது அதே வாய்ப்பை இவர் 5 இளம் வீரர்களிடம் இழந்து உள்ளார். தினேஷ் கார்த்திக்கிற்கு வயதாகிவிட்டது என்பதால்.. இனியும் இவர்களை மீறி இந்திய அணியில் இடம்பிடிப்பது நடக்காத காரியம் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 31, 2020, 9:42 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+