Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பயப்படாத.. அப்படியே போடு".. தோனியை தூக்க தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்.. மைக்கில் பதிவான பிளான்

அபுதாபி: நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டுக்கொடுத்த திட்டங்கள் கேகேஆர் அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்துள்ளது. அதிலும் நேற்று தோனியின் விக்கெட்டை எடுக்க தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் திட்டங்களை வகுத்து கொடுத்தார்.

நேற்று கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கடைசி கட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுத்து மாஸ் வெற்றிபெற்றது. முதலில் தோல்வி அடையும் என்று கருதப்பட்ட கொல்கத்தா, தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான கேப்டன்சி மூலம் வெற்றிபெற்றது.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஓவர்களை கொடுத்த விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று முதலில் களமிறங்கிய கொல்கத்தா 10 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சிஎஸ்கே 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எத்தனை

எத்தனை

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பவுலிங் கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. ரசல் மற்றும் நரேன் இருவரையும் 10 ஓவர்களுக்கு பின்தான் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தினார். இவர்கள்தான் கடைசியில் போட்டியை மாற்றினார்கள். இதை சிஎஸ்கே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே சிஎஸ்கே மோசமாக சொதப்பி கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்தது.

சக்ரவர்த்தி

சக்ரவர்த்தி

நேற்று போட்டியில் தமிழக வீரர் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதில் சக்ரவர்த்தி முக்கிய பங்கு வகித்தார்.மிஸ்டரி ஸ்பின் பவுலர் என்று அழைக்கப்படும் சக்ரவர்த்தி நேற்று ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் கொடுக்க கூடாது என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.

உறுதி

உறுதி

மொத்தம் 4 ஓவர் போட்ட சக்ரவர்த்தி 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் எடுப்பதை விட ரன் செல்வதை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் என்று சக்ரவர்த்தி சரியான லென்தில் ரிஸ்க் எடுக்காமல் பவுலிங் செய்தார். கீப்பிங் செய்து கொண்டு இருந்த தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இன்னொரு பக்கம், சக்ரவர்த்திக்கு தமிழில் வழிகாட்டிக்கொண்டு இருந்தார்.

இப்படி போடு

இப்படி போடு

மச்சி இப்படி போடு.. ஸ்லோ பால் போடாத என்று வழி காட்டிக்கொண்டு இருந்தார். தோனி பேட்டிங் செய்த போது ஒவ்வொரு பந்துக்கும் இதேபோல் தினேஷ் கார்த்திக் சக்ரவர்த்தியை வழிகாட்டிக்கொண்டு இருந்தார். தோனியின் விக்கெட்டை எடுக்க சக்ரவர்த்தியைதான் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தினார். தோனி லெக் பிரேக் பவுலிங்கில் திணறுவார் என்பதால் சரியாக சக்ரவர்த்தியை தினேஷ் கார்த்திக் கொண்டு வந்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் 17வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை ஸ்டம்ப்பிற்கு வெளியே போடும்படி சக்ரவர்த்தியிடம் டிகே குறிப்பிட்டார். அதில் இரண்டாவது பாலில் தோனி பவுண்டரி அடித்தார். இந்த நிலையில் சரியாக மூன்றாவது பந்தை, ஸ்டம்பை நோக்கி போடு என்று சக்ரவர்த்தியிடம் கூறினார். இதற்கு சக்ரவர்த்தி பயந்து மீண்டும் கேள்வி கேட்டார்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு தினேஷ் கார்த்திக், பயப்படமா போடு.. அப்படியே போடு என்று குறிப்பிட்டார். சரியாக சக்ரவர்த்தி தினேஷ் கார்த்திக் சொன்னது போல பவுலிங் செய்தார். சரியாக உள்ளே சென்ற பந்தை தோனி கணிக்க தவறினார். போல்ட்!.. 12 பந்துகள் மட்டுமே பிடித்த தோனி 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த விக்கெட் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது.

தமிழக வீரர்

தமிழக வீரர்

இந்த தொடரில் வருண் சக்ரவர்த்தி நன்றாக பந்து வீசி வருகிறார். தினேஷ் கார்த்திக் கீப்பிங் சைடில் இருந்து சக்ரவர்த்திக்கு கொடுக்கும் அறிவுரைகள் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. நேற்று சிஎஸ்கே வீரர்களை கட்டுப்படுத்த இவர்கள் இருவரும் போட்டுக்கொடுத்த திட்டம் பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 8, 2020, 9:05 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+