Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா கேப்டன் பதவியில் இருந்து விலகல்.. தினேஷ் கார்த்திக் பரபர முடிவு.. மோர்கன் பதவி ஏற்கிறார்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியிலும் நினைத்து பார்க்க முடியாத திருப்பங்கள் நடந்து வருகிறது.

முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். புதிய வீரர்கள் பல்வேறு அணியில் இணைந்து உள்ளனர். ரெய்னா, ஹர்பஜன் போன்ற வீரர்கள் தொடரில் இருந்தே விலகி உள்ளனர்.

விலகினார்

விலகினார்

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விலகல் குறித்து சில மணி நேரங்களுக்கு முன்புதான் தினேஷ் கார்த்திக் முடிவு எடுத்தார். இது தொடர்பாக அவர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

அதோடு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு கொல்கத்தா அணி நிர்வாகத்தின் இணைய பக்கத்தில் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது.

நீக்கம்

நீக்கம்

சிறப்பான அணி இருந்தும் கொல்கத்தா பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவாரா என்று கேள்விகள் இருந்தது. அதோடு அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தினேஷ் கார்த்திக் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இந்த நிலையில்தான் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருக்கிறார். இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்பார் என்று கூறுகிறார்கள்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கடந்த சில போட்டிகளில் மட்டுமே தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். 7 போட்டிகளில் ஆடி இருக்கும் கொல்கத்தா 4 போட்டிகளில் வென்றுள்ளது.பஞ்சாப் , சிஎஸ்கேவை வீழ்த்திய போது தினேஷ் கார்த்திக் பாராட்டப்பட்டார். ஆனால் கடைசி போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று மும்பை போட்டிக்கு முன்னதாக பதவி விலகி உள்ளார்.உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு கோப்பை வாங்கி கொடுத்த இயான் மோர்கன் அணியின் கேப்டன் ஆகிறார்.

Story first published: Friday, October 16, 2020, 15:27 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+