வேண்டுமா? வேண்டாமா?.. ஒழுங்காக ஆடுங்கள்.. சிக்கலில் மாட்டிய தினேஷ் கார்த்திக்.. தலைவிதியே மாறும்!
துபாய்: இன்று டெல்லிக்கு எதிராக நடக்கும் ஐபிஎல் போட்டியில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இன்று எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும்.
இதுவரை 10 போட்டிகளில் ஆடி உள்ள கொல்கத்தா அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.

கொல்கத்தா எப்படி
கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றபின் நடந்த 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வென்றுள்ளது. தொடருக்கு மத்தியில் கேப்டன்சி மாறியது கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்து உள்ளது. தினேஷ் கார்த்திக் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

விமர்சனம்
தனது தனிப்பட்ட பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட பேட்டிங்க் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். இயான் மோர்கன் கேப்டனாக இருப்பதே அணிக்கு நல்லது என்று தினேஷ் கார்த்திக் விட்டுக்கொடுத்தார். ஆனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின்பும் கூட தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின் தினேஷ் கார்த்திக் மும்பைக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் மட்டும் 29 ரன்கள் எடுத்தார். பெங்களூருக்கு எதிராக இவர் வெறும் 4 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் கொல்கத்தா அந்த மோசமாக சறுக்கிய போது போது ஒரு மூத்த வீரராக தினேஷ் கார்த்திக் எதுவும் செய்யவில்லை.

ஏன் இப்படி
தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பதவியை ராஜினாமா செய்தவர் சரியாக ஆடுவது இல்லை. அதேபோல் அடுத்தவருடம் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் திட்டமிட்டே இந்த ராஜினாமா முடிவை எடுத்தார். ஆனால் இப்போதும் கூட அவரின் பேட்டிங் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை.

பார்ம் இல்லை
இனியும் தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை என்றால் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது. கொல்கத்தா அணியிலும் கூட இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான். இன்னும் 4 ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா ஆட உள்ள நிலையில் அனைத்திலும் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications