Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன *** பவுலிங் இது.. சக வீரரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்.. கடும் கோபம்.. என்ன நடந்தது?

துபாய்: நேற்று கொல்கத்தா அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் சக வீரரை பார்த்து மோசமாக கெட்ட வார்த்தையில் திட்டியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

பொதுவாக தினேஷ் கார்த்திக் மைதானத்தில் கோபம் அடைய கூடிய நபர் கிடையாது. வெளிப்படையாக இவர் மைதானத்தில் கோபத்தை காட்ட மாட்டார்.

அதேபோல் மைதானத்தில் இவர் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது கிடையாது. வெற்றி தோல்வி அனைத்தையும் இவர் ஒரே மாதிரி எதிர்கொள்வார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இப்படி அமைதியாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கே நேற்று மைதானத்தில் சக வீரரை பார்த்து மோசமாக கெட்ட வார்த்தையில் திட்டியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பொதுவாக தினேஷ் கார்த்திக் தமிழக வீரர்கள் பவுலிங் செய்யும் போது அவர்களிடம் தமிழில் பேசுவது வழக்கம். இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி தமிழக வீரர்களிடம் தினேஷ் கார்த்திக் தமிழில்தான் பேசுவார்.

தமிழில்

தமிழில்

அதிலும் கொல்கத்தா அணியில் இருக்கும் சக வீரர் வருண் சக்ரவர்த்தியிடம் தினேஷ் கார்த்திக் எப்போதும் தமிழில்தான் பேசுவார். டேய் இப்படி பவுலிங் போடு, உள்ளே போடு என்று நிறைய விஷயங்களை தமிழில்தான் கூறுவார். வருண் சக்ரவர்த்தி இளம் வீரர் என்பதால் தினேஷ் கார்த்திக் சொல்வதை அப்படியே பின்பற்றுவார்.

தோனி விக்கெட்

தோனி விக்கெட்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுக்க கூட தினேஷ் கார்த்திக் தமிழில் சொன்ன வியூகம்தான் உதவியது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் தினேஷ் ஏனோ கோபமாக காணப்பட்டார். கீப்பிங் செய்த மொத்த நேரமும் கோபமாக காணப்பட்டார். சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற கோபமா என தெரியவில்லை.. போட்டி முழுக்க கோபமாக அவர் காணப்பட்டார்.

நேற்று என்ன நடந்தது

நேற்று என்ன நடந்தது

இந்த நிலையில் மும்பையின் டீ காக் நேற்று பேட்டிங் செய்யும் போது 14 வது ஓவரை வீச வருண் சக்ரவர்த்தி வந்தார். அந்த ஓவர் முழுக்க வருணுக்கு தினேஷ் கார்த்திக் தமிழில் கோபமாக அறிவுரை வழங்கினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வெளியே போடும்படி தினேஷ் கார்த்திக் கூறினார். ஆனால் வருண் சக்கரவர்த்தி பந்தை தூக்கி உள்ளே வீசினார்.

கோபம்

கோபம்

இதனால் கோபம் அடைந்த தினேஷ் கார்த்திக் கெட்ட வார்த்தையில் தமிழில் வருண் சக்ரவர்த்தியை பார்த்து திட்டினார். என்ன பவுலிங் இது என்று குறிப்பிட்டு கூடவே சில கெட்ட வார்த்தைகளை இணைத்து தினேஷ் கார்த்திக் பேசினார். தினேஷ் கார்த்திக் எப்போதும் அமைதியாக இருந்து பார்த்தவர்களுக்கு நேற்று இவர் நடந்து கொண்ட விதம் வித்தியாசமாக இருந்தது.

Story first published: Saturday, October 17, 2020, 15:32 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+