சும்மா தட்டிவிடதான் பார்ப்பான்.. போடு.. ஜாதவை தமிழில் கிண்டல் செய்த தினேஷ் கார்த்திக்.. பரபர சம்பவம்
துபாய்: நேற்று சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். இவர் சிஎஸ்கே வீரர் ஜாதவை தமிழில் கிண்டல் செய்தது வைரலாகி உள்ளது.
Recommended Video
கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி குறித்த அதிரடி விவரங்கள், தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.
அதிரடியான டி20 போட்டியில் தோனி, ஜாதவ் ஆகியோர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி சிஎஸ்கே அணியின் தோல்விக்கு வழி வகுத்தனர். இரண்டு பேரின் பேட்டிங்கும் நேற்று மிக மோசமாக இருந்தது.

மோசம்
நேற்று கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டியின் தொடக்கத்தில் இருந்து சக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியிடம் தமிழில்தான் பேசினார். வருண் போட்ட நான்கு ஓவரிலும் அவரிடம் தினேஷ் கார்த்திக் தமிழில்தான் பேசினார். எப்படி எப்படி பந்து வீச வேண்டும் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.

சிஎஸ்கே
இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் ஜாதவை தினேஷ் கார்த்திக் தமிழில் கிண்டல் செய்தது வைரலாகி உள்ளது.நேற்று தோனி விக்கெட் விழுந்த பின் கேதார் ஜாதவ் பேட்டிங் செய்ய வந்தார். 17வது ஓவரின் 4வது பந்தில் கேதார் ஜாதவ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது வருண் சக்ரவர்த்தி பவுலிங் செய்தார்.

கீப்பிங்
பின்பக்கம் கீப்பிங் நின்று கொண்டு இருந்த தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தியிடம் கேதார் ஜாதவ் குறித்து கிண்டலாக பேசிக்கொண்டு இருந்தார். அதில், பந்தை வெளியே போடு.. உள்ளே போடாதே.. இவன் சும்மா தட்டிவிடத்தான் பார்ப்பான். வெளியவே போடு என்று கூறினார். அதோடு அதற்கு ஏற்றபடி பீல்டிங்கை மாற்றினார்.

மாற்றினார்
ஜாதவ் வந்த பின் அவருக்கு ஏற்றபடி உள் வட்டத்தில் பீல்டிங்கை மாற்றினார். சிங்கிள்தான் அடிப்பார் என்பதால் தினேஷ் கார்த்திக் இப்படி பீல்டிங் செட் செய்தார். அதேபோல் வருண் சக்ரவர்த்தியின் முதல் பாலில் ஜாதவ் எதுவும் அடிக்காமல் டிபன்ஸ் மட்டுமே செய்தார்.

டிபன்ஸ்
நேற்று போட்டியில் ஜாதவ் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியதை எல்லோரும் கிண்டல் செய்தனர். கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கும் அவரை களத்தில் கிண்டல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications