Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு தவறு செய்தால் நீக்க மாட்டார்களா? கொதித்த ஷாருக்கான்.. தப்பித்த தினேஷ் கார்த்திக்.. பின்னணி!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்கும் எண்ணத்தில் கேகேஆர் அணி நிர்வாகம் இல்லை என்று கூறுகிறார்கள்.

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் அபுதாபியில் இன்று போட்டி நடக்க உள்ளது.

இன்று நடக்கும் போட்டி கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்க போகிறது. தனது கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

விமர்சனம்

விமர்சனம்

4 போட்டிகள் விளையாடி உள்ள கொல்கத்தா இரண்டு போட்டிகளில் வென்று இருந்தாலும் கூட கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. காரணம் 1. அவரின் அனுப்பும் பேட்டிங் ஆர்டர் தவறாக இருக்கிறது. நல்ல பேட்ஸ்மேன்களை டாப் ஆர்டரில் இறக்குவது இல்லை என்று புகார் உள்ளது.

காரணங்கள்

காரணங்கள்

அதற்கு அடுத்து அவர் கொடுக்கும் பவுலிங் ரொட்டேஷன் சரியில்லை. அவர் பவுலர்களை தேர்வு செய்யும் விதம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அடுத்ததாக கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் தனிப்பட்ட பேட்டிங் பார்ம் மோசமாக உள்ளது. அணியில் இருக்கும் ரசல், மார்கன் போன்ற வீரர்களுடன் அவர் சரியான உறவை கடைபிடிப்பது இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

கோபம்

கோபம்

இந்த நிலையில்தான் 2 தோல்விகளால் தினேஷ் கார்த்திக் மீது ஷாருக் கான் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தது. அவர் ஒரு கேப்டனாக சரியாக செயல்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் பேட்ஸ்மேனாகவும் சரியாக செயல்படவில்லை. இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஷாருக் தொடங்கி பலரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவும், தேர்வு குழுவும் தினேஷ் கார்த்திக்குக்கு சப்போர்ட் என்று கூறப்படுகிறது. அவரிடம் வேறு பிளான் இருக்கிறது. ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவை விமர்சனம் செய்யும் முன் மற்ற அணிகளையும் பார்க்க வேண்டும். சிஎஸ்கே, மும்பை, ஹைதராபாத் கூட இந்த தொடரில் தொடக்கத்தில் தோல்வி அடைந்தது. அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள்தான் இதற்கு காரணம்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் அனைத்து விஷயங்களையும் சரியாக செய்கிறார். கேப்டனாக அவர் சரியாக செயல்படுகிறார். ஆனால் சில விஷயங்களை டி 20 போட்டியில் கணிக்க முடியாது . அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் சில முடிவுகள் எதிராக வர வாய்ப்புள்ளது. இதற்கு தினேஷ் கார்த்திக்கை குற்றம் சொல்ல முடியாது என்று பயிற்சியாளர் குழு அவருக்கு ஆதரவு அளித்துள்ளது.

பிளான் என்ன

பிளான் என்ன

இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்கும் எண்ணத்தில் கேகேஆர் அணி நிர்வாகம் இல்லை என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் தினேஷ் கார்த்திக் தனது தவறுகளை திருத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல புதிய பிளான் வைத்துள்ளார் என்கிறார்கள். அதன்படி அணியின் ஓப்பனிங் இணையை தினேஷ் கார்த்திக் மாற்றுவார் என்று கூறப்படுகிறது.

ஓப்பனிங் எப்படி

ஓப்பனிங் எப்படி

இன்றைய போட்டியில் புதிய ஒப்பனர்கள் இறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் இயான் மோர்கனின் பேட்டிங் இடத்தை தினேஷ் கார்த்திக் மாற்ற போகிறார் என்று கூறுகிறார்கள். இயான் மோர்கன், ரசல் இறங்கிய பின் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது. இன்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் இந்த பிளானை களமிறக்க போகிறார் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, October 7, 2020, 15:29 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+