Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்த சீஸனும் காலிதான்.. தோனி, வாட்சன் வந்தாலே இப்படித்தான் நடக்கிறது.. சிக்கியது சிஎஸ்கே.. பின்னணி!

துபாய்; 2020 ஐபிஎல் சீசன் அமீரகத்த்தில் நடப்பதும் கூட சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக தோனி சரியாக பினிஷிங் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதற்கும் இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது.

2020 ஐபிஎல் சீசன் அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாய், சார்ஜா, அபிதாபியில் இந்த முறை போட்டிகள் நடந்து வருகிறது. சிஎஸ்கேவின் போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது.

இதனால் 2020 ஐபிஎல் சீசனில் துபாய் பிட்ச் சிஎஸ்கேவின் ஹோம் மைதானமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதே ஹோம் மைதானம்தான் தற்போது சிஎஸ்கேவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

ஏன் மாறியது

ஏன் மாறியது

துபாய் ஹோம் மைதானம் என்பதால் அதை சிஎஸ்கே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இந்த மைதானத்தில் இருக்கும் பிட்ச்களை சேப்பாக்கம் மைதானம் போல சிஎஸ்கே மாற்றியது. ஆனால் இதுவே தற்போது சிஎஸ்கேவிற்கு எதிராக முடிந்துள்ளது. துபாய் மைதானம் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது.

மாறியது

மாறியது

அதிலும் இந்த ஸ்பின் நேரம் நேரம் செல்ல செல்ல வறண்டு போகிறது. இதனால் இரண்டாவாது இன்னிங்சில் பவுலிங் செய்ய எளிதாக இருக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் ஸ்பின் பவுலிங் செய்ய துபாய் பிட்ச் வசதியாக உள்ளது. இதுதான் சிஎஸ்கே தோல்விக்கும் காரணமாக அமைத்துள்ளது. இதுவரை நடந்த 7 போட்டிகளிலும் சிஎஸ்கேதான் சேசிங் செய்துள்ளது.

பிட்ச்

பிட்ச்

அதிலும் துபாயில் நடந்த போட்டியில் எல்லாம் சிஎஸ்கேதான் சேசிங் செய்துள்ளது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது சிஎஸ்கே மோசமாக திணறுகிறது. ஸ்பின் பவுலிங் நன்றாக இருக்கிறது, ஸ்பீட் பவுலிங்கும் இரண்டாவது இன்னிங்சில் நன்றாக ஸ்விங் ஆகிறது என்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறுகிறார்கள்.

தோனி

தோனி

அதிலும் துபாய் பிட்சில் சிஎஸ்கேவின் முக்கியமான சில வீரர்கள் அதிகம் திணறுகிறார்கள். தோனி, வாட்சன், ராயுடு, சாம் கரன், ஜாதவ் ஆகியோர் துபாய் பிட்சில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். இதற்கு காரணம் இந்த பிட்ச்தான். முதல் இன்னிங்சில் சிஎஸ்கே ஸ்பின் கை கொடுப்பது இல்லை.. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் மாறிவிடுகிறது. மிகவும் வறட்சியாக பிட்சில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு சேசிங் செய்வது கடினம்.. சிஎஸ்கேவின் தோல்விக்கு இதுதான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

அதோடு தோனி, வாட்சன் வந்தாலே எதிரணி வீரர்கள் ரஷீத் கான், நரேன், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற ஸ்பின் பவுலர்களைதான் கொண்டு வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் மோசமாக திணறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கேவிற்கு இன்னும் சில போட்டிகள் இதே துபாய் மைதானத்தில் நடக்கும் என்பதால்.. மொத்த தொடரும் சிஎஸ்கேவிற்கு எதிராக செல்ல கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள.

Story first published: Wednesday, October 14, 2020, 13:56 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+