Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா, ரபாடா வரிசையில் இடம் பிடித்த தமிழக வீரர்.. இவருக்கா இந்திய அணியில் இடமில்லை?

அபுதாபி : தமிழக வீரர் டி நடராஜன் 2020 ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

தன் யார்க்கர் பந்துவீச்சால் எதிரணியை நிலைகுலைய வைத்து ஹைதராபாத் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அவரது பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்கள் சாய்த்து வருகிறார்.

எலிமினேட்டர் போட்டி

எலிமினேட்டர் போட்டி

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் அவர் பெங்களூர் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி திருப்பம் அளித்தார். வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

ஏபிடி விக்கெட்

ஏபிடி விக்கெட்

அதிலும் ஏபி டிவில்லியர்ஸ் அவரது யார்க்கர் பந்துவீச்சில் ஏமாந்து மிடில் ஸ்டம்புகளை பறி கொடுத்தார். அந்த விக்கெட் பெரிய திருப்பமாக இருந்தது. அத்துடன் இந்த சீசனில் நடராஜன் கடைசி 5 ஓவர்களில் தன் 12வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

இதன் மூலம் இந்த சீசனில் கடைசி 5 ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரபாடா, பும்ராவுக்குப் பின் மூன்றாவது இடம் பிடித்தார். ரபாடா 16 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார், பும்ரா 14 விக்கெட்கள் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நடராஜன் 12 விக்கெட்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

நடராஜன் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக பந்து வீசிய நிலையில் அவரை இந்திய அணியில் பிசிசிஐ தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. வலைப் பயிற்சியில் பந்துவீசும் கூடுதல் பந்துவீச்சாளராகவே ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளார்.

Story first published: Saturday, November 7, 2020, 11:47 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+