Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென நேற்று இரவு வந்து பேசினார்.. என்ன மனுஷன்.. தினேஷ் கார்த்திக் பற்றி மௌனம் கலைத்த மோர்கன்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்யும் முன் நேற்று தன்னிடம் வந்து பேசினார் என்று இயான் மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பின்பும் கூட தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றுள்ளார். இங்கிலாந்து அணியை உலகக் கோப்பை வெல்ல வைத்த மோர்கன் கொல்கத்தாவை வழி நடத்த உள்ளார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இது தொடர்பாக இயான் மோர்கன் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், நேற்று இரவுதான் தினேஷ் கார்த்திக் என்னிடம் வந்து பேசினார். நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார். அதோடு என்னிடம் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அவரின் முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அணியில் இருக்கும் யாரும் தினேஷ் கார்த்திக் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கூட அவருக்கு சுயநலம் கிடையாது. எப்படிப்பட்ட மனிதர் அவர். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி அணியை முன்னிறுத்த வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அணிக்கு நன்றாக இருக்கும்

அணிக்கு நன்றாக இருக்கும்

இதுதான் அணிக்கு நன்றாக இருக்கும் என்று டிகே கூறினார். இது போன்ற முடிவுகளை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும்.கொல்கத்தா அணியை வழி நடத்துவதில் பெருமை கொள்கிறேன். வீரர்களுடன் இணைந்து ஒன்றாக செயல்பட விரும்புகிறேன்.

பாதி தொடர்

பாதி தொடர்

பாதி தொடர்தான் முடிந்து உள்ளது.நாங்கள் போட்ட சில திட்டங்கள் சரியாக பலன் அளிக்கவில்லை. விரைவில் புதிய திட்டங்களை வகுப்போம். இன்று நடக்கும் போட்டி எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும், என்று இயான் மோர்கன் கூறியுள்ளார்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

இயான் மோர்கன் ஒரு பக்கம் இப்படி பேசி இருக்க இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் இதே கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தினேஷ் கார்த்திக் போன்ற லீடர்கள் அணியில் இருப்பதை பாராட்டுகிறோம். அவருக்கு எப்போதும் அணிதான் முக்கியம். இது போன்ற முடிவுகளை எடுக்க பெரிய தைரியம் வேண்டும்., என்று குறிப்பிட்டுள்ளார் .

Story first published: Friday, October 16, 2020, 19:34 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+