Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியையே அசர வைத்தார்.. 4 வெற்றிக்கு பின்பும் ராஜினாமா..தினேஷ் கார்த்திக் முடிவிற்கு இதுதான் காரணமா?

துபாய்: கொல்கத்தா அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற பின்பும் கூட தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியில் ராஜினாமா செய்து இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கொல்கத்தா அணி இருந்தது. முதலில் கொல்கத்தா அணியை பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதிலும் தொடக்கத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை. அணியும் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணி மீது பெரிய அளவில் யாருக்கும் ஈர்ப்பு இல்லை.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

தொடக்கத்தில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியை பார்த்து பலர் விமர்சனம் வைத்தனர். அவர் அனுப்பும் பேட்டிங் ஆர்டர், ஓவர் கொடுக்கும் முறை, வீரர்களை பயன்படுத்தும் முறை என பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது. அதிலும் இயான் மோர்கனை 7வது இடத்தில் பேட்டிங் அனுப்பியது மேலும் விமர்சனம் செய்யப்பட்டது.

பதிலடி

பதிலடி

டெல்லிக்கு எதிராகவும், மும்பைக்கு எதிராகவும் கொல்கத்தா தோல்வி அடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார். அதிலும் சிஎஸ்கே அணியை 160+ ஸ்கோர் கூட எடுக்க விடாமல் தினேஷ் கார்த்திக் சுருட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

தோனியே தினேஷ் கார்த்திக்கின் பிளானை பார்த்து மிரண்டு போனார். கடந்த ஹைதராபாத்திற்கு எதிரான சிஎஸ்கே போட்டியில் தோனியே தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியை பின்பற்றிதான் ஓவர் கொடுத்தார். அதோடு பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் சிறப்பான கேப்டன்சி மூலம் கடைசி நொடியில் பஞ்சாப் அணியை டிகே வீழ்த்தினார். 7 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் கொல்கத்தா வென்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீக்க வேண்டாம்

நீக்க வேண்டாம்

அதே போல் அணி நிர்வாகமும் இவர் மீது எந்த விதமான பிரஷரும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. நீங்கள் பதவி விலகுங்கள் என்று எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. தொடர் வெற்றிகள் காரணமாக தினேஷ் கார்த்திக் மீது கொல்கத்தா அணி நிர்வாகம் நம்பிக்கையோடுதான் இருந்தது. ஆனாலும் தினேஷ் கார்த்திக் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தினேஷ் கார்த்திக்கின் ராஜினாமாவிற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது. காரணம் 1 - பெரும்பாலும் தினேஷ் கார்த்திக்குக்கு இயான் மோர்கன்தான் ஆலோசனை வழங்குகிறார். இதனால் அவரே கேப்டனாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று டிகே கருதுகிறார். காரணம் 2- ரசல் போன்ற வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை விட இயான் மோர்கன் சொல்வதையே கேட்க விரும்புகிறார்கள். அதனால் இயான் மோர்கன் சிறப்பான தலைவராக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் நினைத்துள்ளார்

வேறு காரணம்

வேறு காரணம்

காரணம் 3 - இயான் மோர்கன் உலகக் கோப்பையை வென்ற கேப்டன். இதனால் பிளே ஆப் போட்டிகளுக்கு முன் அணியை அவரே வழியை நடத்துவது சரியாக இருக்கும். காரணம் 4- தனிப்பட்ட வகையில் தனக்கு அழுத்தம் குறைவாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் நினைத்துள்ளார். இதனால்தான் யாருமே பதவி விலக சொல்லாத போதும் அணியின் நன்மைக்காக பெருந்தன்மையாக பதவி விலகி உள்ளார்.

Story first published: Friday, October 16, 2020, 20:36 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+