Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று மேட்ச்.. குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான்.. மொத்தமாக தடை செய்ய வேண்டும்..வலுக்கும் எதிர்ப்பு

சார்ஜா: நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கி இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. நான்கு போட்டிகளுமே கடைசிவரை திரில்லாக சென்றது. அதிலும் சென்னை விளையாடும் போட்டிகள் எல்லாம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இன்னொரு பக்கம் டெல்லி பஞ்சாப் மோதிய போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. ஹைதராபாத்திற்கு ஷாக் கொடுத்து, பெங்களூர் அதிரடி வெற்றிபெற்றது.

 என்ன ஒற்றுமை

என்ன ஒற்றுமை

இந்த ஐபிஎல் தொடரில் எல்லா போட்டியிலும் நடந்த முக்கியமான சம்பவம் என்று பார்த்தால், அது நடுவர்கள் செய்த மோசமான தவறுகள்தான். அடுத்தடுத்து எல்லா போட்டிகளிலும் நடுவர்கள் தவறு செய்து வருகிறார்கள். முதலில் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடையிலான போட்டியில் நடுவர்கள் பெரிய தவறு செய்தனர்.

தவறு செய்தனர்

தவறு செய்தனர்

டெல்லி - பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் இரண்டு ரன் எடுத்த போது, அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று நடுவர் தீர்ப்பு அளித்தார். இதனால் அப்போது ஒரு ரன் மட்டுமே பஞ்சாப் அணிக்கு வழங்கப்பட்டது. மைதானத்தில் இருந்த நடுவர் நிதின் மேனன்தான் இந்த முடிவை எடுத்தது. இதனால் போட்டி டை ஆனது. அதோடு சூப்பர் ஓவர் வரை போட்டி சென்று, அதில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

நடுவர்கள் தவறு

நடுவர்கள் தவறு

நடுவர்கள் செய்த தவறு காரணமாக பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. அதேபோல் பெங்களூர், ஹைதராபாத் போட்டியிலும் நிறைய தவறான முடிவுகளை நடுவர்கள் எடுத்தார்கள். சாதாரண விக்கெட்டிற்கு கூட நடுவர்கள் மூன்றாவது அம்பயரிடம் ஆலோசனை கேட்கும் நிலைதான் இருக்கிறது.இதை பஞ்சாப் அணியின் ஓனர் பிரீத்தி ஜிந்தாவே கடுமையாக கண்டித்து இருந்தார்.

நேற்று எப்படி

நேற்று எப்படி

அதேபோல் நேற்று போட்டியிலும் டாம் கரனுக்கு விக்கெட் கொடுத்துவிட்டு பின் அதை பற்றி மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை செய்தனர். விக்கெட் கொடுத்த பின் ரிவ்யூ இல்லாத பட்சத்தில், அதை பற்றி மூன்றாவது ஆலோசகரிடம் ஆலோசனை செய்ய கூடாது. விக்கெட் கொடுக்கும் முன் மூன்றாவது ஆலோசகரிடம் பேசலாம், ஆனால் விக்கெட் கொடுத்த பின் பேச கூடாது.

தெரியவில்லை

தெரியவில்லை

ஆனால் இது கூட தெரியாமல் நேற்று நடுவர்கள் தவறு செய்தனர். இதனால்தான் தோனியும் நேற்று சென்று நடுவர்களிடம் வாதம் செய்தார். அதேபோல் பல நோ பால்களை நடுவர்கள் மிஸ் செய்வதாக புகார் உள்ளது. கிரிக்கெட் ஆலோசகர்கள், வர்ணனையாளர்கள் பலர் ஐபிஎல் தொடரில் நடுவர்களின் செயல்பாடு மோசமாக இருப்பதாக புகார் வைத்துள்ளனர். மூன்றாவது அம்பயரிடம் நொடிக்கு நொடி ஆலோசனை கேட்பார்கள் என்றால் எதற்கு களத்தில் அம்பயர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது ?

புகார் வைத்தனர்

புகார் வைத்தனர்

இந்த நிலையில் இப்படிப்பட்ட நடுவர்களை தடை செய்ய வேண்டும். இந்திய நடுவர்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் நல்ல நடுவர்களை மட்டுமே எடுக்க வேண்டும். நடுவர்கள் அம்பயரிங் பயிற்சி மேற்கொள்ள இது இடம் இல்லை. ஐபிஎல்லில் இருந்து மோசமான நடுவர்களை நீக்கினால், தடை செய்தால் போட்டி நியாயமாக நடக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Wednesday, September 23, 2020, 16:15 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+