Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த தோனியா? களத்தில் நேர்ந்த அவமானம்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் ஹெல்மெட்டை வீசிய இளம் வீரர்.. பின்னணி!

துபாய்: டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால் சரியாக ஆடாதது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

நேற்று டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது. இரண்டு அணியிலும் சிறப்பான ஹிட்டர்கள் இருப்பதாலும், நேற்று போட்டி சார்ஜா மைதானத்தில் நடந்த காரணத்தாலும் இந்த மேட்ச் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 184 ரன்கள் எடுத்தது. எளிதாக 200 ரன்கள் அடிக்க வேண்டிய மைதானத்தில் டெல்லி அணி தேவையில்லாத விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் எப்படி

ராஜஸ்தான் எப்படி

அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் இந்த முறையும் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வரிசையாக வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் ஒரு பக்கம் ஜெய்ஷ்வால் பொறுமையாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.

பொறுமை

பொறுமை

வரிசையாக ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்த காரணத்தால் ஜெய்ஷ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுமையாக ஆடினார். தொடக்கத்தில் 20 பந்துகளை பிடித்த அவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒவ்வொரு பந்திலும் சிங்கிள் அடித்து மிகவும் பொறுமையாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது.

மோசம்

மோசம்

ஜெய்ஷ்வால் 36 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் இரண்டு 2 சிக்ஸ் அடித்தார். ஆனாலும் மற்ற பந்துகளில் எந்த ஷாட்டும் அடிக்காமல் மிக மோசமாக ஆடினார். இவரின் டெஸ்ட் இன்னிங்ஸ் காரணமாக எதிரில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது. இதுவும் கூட ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக் இருந்தது.

பேட்டிங்

பேட்டிங்

ஜெய்ஷ்வால் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இவர் தனது முதல் போட்டியில் மோசமாக ஆடி அவுட்டானார். இரண்டாவது போட்டியிலும் வந்த வேகத்தில் வெளியேறினார். இந்த நிலையில் நேற்று போட்டியிலும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். நேற்று இவரின் பேட்டிங்கை பலரும் தோனி மற்றும் ஜாதவின் பேட்டிங் உடன் ஒப்பிட்டு பேசினார்கள்.

ஜெய்ஷ்வால் கிண்டல்

ஜெய்ஷ்வால் கிண்டல்

உங்கள் பேட்டிங் தோனி ஆடுவது மெதுவாக இருக்கிறது. இவர் ஏன் முக்கியமான கட்டத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார் என்று பலரும் கிண்டல் செய்தனர். அதிலும் தோனியை பார்த்து ஜெய்ஷ்வால் கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு சிலர் கிண்டல் செய்தனர். இப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்றுதான் தோனியை பார்த்து நீங்கள் கும்பிட்டீர்களா என்றெல்லாம் கூட கிண்டல் செய்தனர்.

ஜெய்ஷ்வால் செம வீரர்

ஜெய்ஷ்வால் செம வீரர்

நேற்று தான் அவுட் ஆன பின் மிகவும் கோபமாக ஜெய்ஷ்வால் பெவிலியன் சென்றார். டக் அவுட்டில் கோபமாக ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். அதோடு நேற்று போட்டிக்கு பின் இவர் டிரெஸ்ஸிங் ரூமில் கோபமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இவர் கஷ்டப்பட்டு வருகிறார். மூன்று போட்டியிலும் சரியாக ஆடாத காரணத்தால் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் இவருக்கு வந்துள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:35 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+