Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை போய் சந்தித்தார்.. அடுத்த போட்டியே இப்படியா? சர்ச்சையில் சிக்கிய ராகுல்.. என்ன நடந்தது?

துபாய்: ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே. எல் ராகுலின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது சர்ச்சையாகி உள்ளது.

நேற்று ஹைதராபாத்திற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி படுதோல்வி அடைந்தது. சென்னைக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்த பஞ்சாப் எப்படியாவது வெற்றிப்பாதைக்கு திரும்பலாம் என்ற ஆசையில் களத்திற்கு வந்தது.

ஆனால் பஞ்சாப் பவுலர்கள் இந்த முறையும் எதிரணியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறினார்கள். அதேபோல் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

உலகக் கோப்பை தொடருக்கு பின் ஜானி பிரைஸ்டோ ஐபிஎல்லில் இப்போதுதான் பார்மிற்கு திரும்பி உள்ளார். நேற்று வெறும் 55 பந்துகள் பிடித்த அவர் 97 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் அடக்கம். அதேபோல் வார்னர் 57 ரன்களும், வில்லியம்சன் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தது.

எப்படி

எப்படி

அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து சொதப்பியது. அந்த அணியில் நிகோலஸ் பூரான் மட்டும் அதிரடியாக ஆடினார். வெறும் 37 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடக்கம். ஆனால் பஞ்சாப் அணியில் வேறு யாரும் சரியாக ஆடாத நிலையில் அந்த அணி 16.5 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் தொடக்கத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் 16 பந்துகள் பிடித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பட்டியலில் கே. எல் ராகுல் டாப் வீரராக இருக்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் 60, 100 என்று அடித்து துவம்சம் செய்து கொண்டு இருந்தார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் 201 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய நிலையில் மிகவும் பொறுமையாக ஆடினார்.

பொறுமை

பொறுமை

டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல 16 பந்துகளில் டொக் வைத்து வைத்து 11 ரன்கள் எடுத்தார். அதிசயமாக இவர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் இவரை தற்போது தோனியோடு ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். பஞ்சாப் சிஎஸ்கே போட்டிக்கு பின் கே. எல் ராகுல் தோனியை சென்று சந்தித்தார். அதன்பின்தான் கே. எல் ராகுல் இப்படி ஆகிவிட்டார். தோனிதான் இதற்கு காரணம் என்று மீம் போட்டு வருகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

அவர் தோனியிடம் டிப்ஸ் கேட்டு இருப்பார் போல. அதனால்தான் இவரின் பேட்டிங் மிக மோசமாகிவிட்டது என்று இணையத்தில் சில கிண்டல் செய்து வருகிறார்கள். தோனியை போய் சந்தித்தார்...அடுத்த போட்டியே டி20ல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார் என்று இவரை வைத்து மீம் போடுகிறார்கள். வரிசையாக செஞ்சுரி, அரை சதம் அடித்தவர் இப்படி 11 ரன்களில் அவுட்டாவதை பார்க்கவும் பாவமாகவே இருக்கிறது.

Story first published: Friday, October 9, 2020, 14:02 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+