தோனியும், சிஎஸ்கேவும் செய்த அதே சாதனை.. சாதித்துக் காட்டிய ரோஹித்.. சாதாரண வெற்றி இல்லை!
துபாய் : 2020 ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
இது சாதாரண வெற்றி அல்ல. மும்பை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை என்பதோடு, கடந்த நான்கு ஐபிஎல் கோப்பை வெற்றிகளை விடவும் அதிக ஆதிக்கம் செலுத்தி கிடைத்த வெற்றி.
அதோடு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த சாதனை ஒன்றை செய்து வியக்க வைத்துள்ளது.

சிஎஸ்கே வெற்றிகள்
சிஎஸ்கே அணி இதற்கு முன் ஆடிய 10 சீசன்களிலும் பிளே-ஆஃப் சென்றுள்ளது. இந்த சீசனில் மட்டுமே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி 2009 மற்றும் 2010 ஐபிஎல் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று சாதனை செய்து இருந்தது.

தோனி சாதனை
எந்த அணியும் தொடர்ந்து இரண்டு சீசன்களில் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அதே போல, இரண்டு சீசன்களில் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை செய்து இருந்தார் தோனி 2010க்குப் பின் எந்த அணியும் அந்த சாதனையை செய்யவில்லை.

மும்பை செய்த சாதனை
தற்போது சிஎஸ்கே அணி செய்த அதே சாதனையை செய்து மிரட்டி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 2019 மற்றும் 2020 ஐபிஎல் தொடரை வென்று இருக்கிறது. இது மும்பை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கம்
இதில் முக்கியமான விஷயம் மும்பை அணியின் ஆதிக்கம் தான். லீக் சுற்றிலும், அதன் பின் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியிலும் மும்பை அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. இறுதிப் போட்டியில் டெல்லி அணியை புரட்டி எடுத்து வென்றது.

வெற்றி
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. தட்டுத் தடுமாறி அந்த அணி 156 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆட மும்பை அணி 157 ரன்கள் வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் எட்டியது.


Click it and Unblock the Notifications