Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா பாருங்க.. அவரால் முடியவில்லை.. கோலி செய்த தப்பு.. பெயரை சொல்லாமல் குத்திக் காட்டிய ஜாம்பவான்!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த வருடம் ஒரு நல்ல ஆல் - ரவுண்டரை வேண்டாம் என அணியில் இருந்து நீக்கியது.

அந்த வீரர் இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

அந்த வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் .இது குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியை பலரும் கலாய்த்து வரும் நிலையில், ஜாம்பவான் பிரையன் லாராவும் குத்திக் காட்டி உள்ளார்.

பெங்களூர் பரிதாபம்

பெங்களூர் பரிதாபம்

ராயல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்றே ஒரு சாபம் உள்ளது. அந்த அணி ஐபிஎல் தொடருக்கு முன் எந்த வீரரை அணியில் இருந்து வெளியேற்றுகிறதோ அவர் வேறு ஒரு அணியில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை ஆடி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பார்.

ஷேன் வாட்சன், டி காக்

ஷேன் வாட்சன், டி காக்

2018இல் ஷேன் வாட்சனை நீக்கியது பெங்களூர் அணி. அவர் சிஎஸ்கே அணியில் சேர்ந்து அந்த ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஐபிஎல் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2019இல் டி ககாக் நீக்கப்பட்டார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து அந்த அணியின் துவக்க வீரராக சிறப்பாக ஆடி ஐபிஎல் கோப்பை வெல்லவும் காரணமாக அமைந்தார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

அடுத்து 2020இல் மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ நீக்கியது பெங்களூர் அணி. அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்ந்து அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதை வைத்து தான் ரசிகர்கள் பெங்களூர் அணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

துவக்க வீரர்

துவக்க வீரர்

மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி சரியாக பயன்படுத்தவில்லை அவரது திறமைகளை வெளிக் கொண்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. டெல்லி அணியில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவரை சிறப்பாக வழிநடத்தி அவரை துவக்க வீரராக ஆட வைத்து திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

லாரா என்ன சொன்னார்?

லாரா என்ன சொன்னார்?

இதை சுட்டிக் கட்டிய பிரையன் லாரா, "கடந்த ஆண்டு பெங்களூர் அணி மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ விடுவித்தது. அவர் தற்போது டெல்லி அணியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என பாருங்கள்." என்றார். கோலி பெயரை சொல்லாமல் அவரை விமர்சித்தார்.

டெல்லி ஜெயிக்கும்

டெல்லி ஜெயிக்கும்

தற்போது ரசிகர்கள் கடந்த இரு ஆண்டுகளில் பெங்களூர் அணி நீக்கிய வீரர்கள் இடம்பெற்ற அணி வெற்றி பெற்றது போலவே, இந்த ஆண்டும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெற்றுள்ள டெல்லி அணி தான் கோப்பை வெல்லும் என கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, November 10, 2020, 15:52 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+