Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 ரன்னுக்கு டாப் ஆர்டர் அவுட்.. வேட்டு வைத்த முன்னாள் வீரர்.. மானம் காத்த இருவர்.. டெல்லி பரிதாபம்!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடும் அதிர்ச்சி அளித்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ட்ரென்ட் போல்ட்.

டெல்லி அணி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் ட்ரென்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்து இருந்தது.

அவரை வைத்து மும்பை அணி, டெல்லி அணியை மிரட்டியது. இறுதிப் போட்டியில் டெல்லி அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி டாஸ்

டெல்லி டாஸ்

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இது சரியான முடிவா? என்ற கேள்வி இருந்தது, காரணம், இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் போது டெல்லி அணியால் சரியாக பந்து வீச முடியாது.

போல்ட் அதிரடி

போல்ட் அதிரடி

டெல்லி அணிக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான் துவக்கம் அளித்தனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து ரஹானே மூன்றாவது ஓவரில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் போராட்டம்

ஸ்ரேயாஸ் போராட்டம்

அடுத்து தவான் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார். 22 ரன்களுக்கு டெல்லி அணி 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை காப்பாற்ற போராடினர்.

பண்ட் அரைசதம்

பண்ட் அரைசதம்

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 5 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஆளாக கடைசி வரை நின்று 65 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

அக்சர் பட்டேல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறைவான ஸ்கோர் என்பதால் மும்பை அணி மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. ட்ரென்ட் போல்ட் டெல்லி அணியின் பரிதாப நிலைக்கு காரணமாக விளங்கினார்.

மும்பை பந்துவீச்சு

மும்பை பந்துவீச்சு

மும்பை அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஜெயந்த் யாதவ் 1, நாதன் கோல்டர் நைல் 2 விக்கெட் வீழ்த்தினர். க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 30 ரன்களும், பொல்லார்டு ஒரு ஓவர் வீசி 13 ரன்களும் கொடுத்தார்.

Story first published: Tuesday, November 10, 2020, 22:28 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+