Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரரை இறக்கி விடுங்க.. சேவாக் சொன்ன அதிரடி பிளான்.. மும்பைக்கு செக் வைத்த பாண்டிங்!

துபாய் : முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடும் டெல்லி கேபிடல்ஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி பலமான அணியாக இருக்கும் நிலையில், அந்த அணியை டெல்லி அணி வீழ்த்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி அணி வீரேந்தர் சேவாக் சொன்ன யோசனையை அப்படியே செயல்படுத்தி உள்ளது. அது மும்பை அணிக்கு செக் வைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மூன்று தோல்விகள்

மூன்று தோல்விகள்

இந்த சீசனில் இதுவரை மும்பை அணியை மூன்று முறை சந்தித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த மூன்று போட்டிகளிலும் டெல்லி தோல்வி அடைந்துள்ளது. எனவே, இறுதிப் போட்டியில் இதற்கு முன் நடந்த தவறுகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெல்லி.

சறுக்கல் எங்கே?

சறுக்கல் எங்கே?

டெல்லி அணிக்கு கடைசி சில லீக் போட்டிகளில் பெரிய பலவீனமாக இருந்தது துவக்கம் தான். துவக்க வீரராக ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே சரியாக செயல்படவில்லை. தவானும் சில போட்டிகளில் தடுமாறினார், தவானை துவக்க வீரராக ஆட வைப்பதில் சிக்கல் இல்லை. அவர் சில போட்டிகளில் தடுமாறினாலும் பல மற்ற போட்டிகளில் 600 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

சேவாக் சொன்ன வீரர்

சேவாக் சொன்ன வீரர்

இந்த நிலையில் தவானுடன் யாரை துவக்க வீரராக ஆட வைக்கலாம் என சேவாக் ஒரு வீடியோவில் யோசனை கூறி இருந்தார். அவர் சொன்ன வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ். அவர் மிடில் ஆர்டரில் ஆடி வந்தார். சேவாக் யோசனையை இரண்டாம் தகுதிப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக செயல்படுத்தி வெற்றி பெற்றது டெல்லி.

பாண்டிங் செய்த மாற்றம்

பாண்டிங் செய்த மாற்றம்

பாண்டிங் மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஆய் துவக்க வீரராக ஆட வைத்தார். அவர் அதிரடியாக 38 ரன்கள் குவித்தார். அவருடன் ஆடிய தவான் 78 ரன்கள் குவிக்க டெல்லி அணி பெரிய ஸ்கோர் எடுத்து வெற்றி பெற்றது. சேவாக் திட்டத்தை சத்தமே இல்லாமல் பாண்டிங் செயல்படுத்தி உள்ளார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

கடந்த போட்டியில் மும்பை அணி டெல்லி அணியின் முதல் மூன்று வீரர்களை ரன்னே எடுக்காமல் வீழ்த்தி அதிர வைத்து இருந்தது. அதற்கு எதிராக தற்போது ஸ்டோய்னிஸ் இறக்கி விடப்பட்டுள்ளார். ஒரு வகையில் இது மும்பை அணிக்கு எதிரான திட்டம் தான். இறுதிப் போட்டியில் ஸ்டோய்னிஸ் என்ன செய்யப் போகிறார்? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, November 10, 2020, 11:50 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+