Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற டெல்லி.. முக்கிய வீரரை நீக்கிய மும்பை.. ரோஹித் அதிரடி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் பந்து வீச உள்ளது.

டெல்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. மும்பை அணியில் அதிரடியாக ஒரு மாற்றம் செய்யபப்பட்டது.

டாஸ் வென்ற டெல்லி

டாஸ் வென்ற டெல்லி

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சேஸிங் செய்வதே சாதகம் என விமர்சகர்கள் கருதினாலும் டெல்லி அணி கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்றதால் பேட்டிங் தேர்வு செய்தது.

ரோஹித் சர்மா குழப்பம்

ரோஹித் சர்மா குழப்பம்

ரோஹித் சர்மா டாஸ் முடிவு குறித்து குழப்பம் அடைந்ததாக கூறினார். என்ன முடிவு எடுப்பது என தான் குழப்பத்தில் இருந்ததால் டாஸில் தோற்றது பற்றி கவலை இல்லை என்றார். முதலில் அதிரடியாக பந்து வீசி அதன் பின் ஆட்டத்தின் போக்கில் செல்லலாம் என்றார்.

முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

மும்பை அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு, ஜெயந்த் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஜெயந்த் யாதவ் ஆஃப் ஸ்பின்னர் என்பதால் டெல்லி அணியின் நான்கு இடது கை பேட்ஸ்மேன்களை குறி வைத்து இந்த முடிவை எடுத்தார் ரோஹித் சர்மா.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை. அதே அணியுடன் களமிறங்கியது டெல்லி அணி. மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராகவே ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணிக்கு இது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 10, 2020, 19:31 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+