Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் முதன்முறை.. அந்த வார்த்தை.. சிஎஸ்கே அணியால் செய்ய முடியாததை செய்து காட்டிய மும்பை!

மும்பை : ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளின் பட்டியலை தேர்வு செய்தால் முதல் இரண்டு இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கைப்பற்றும்.

இதில் யாருக்கு முதல் இடம் என்பதில் 2020 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை போட்டி இருந்தது.

அதில் சிஎஸ்கே அணி சற்று முன்னிலையில் இருந்தது. மும்பை அணி அதை மீறி நான்கு முறை கோப்பை வென்றது.

பெரும் ஆதிக்கம்

பெரும் ஆதிக்கம்

ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று, சிஎஸ்கே அணியால் வாங்க முடியாத பெயரை வாங்கி சாதித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தான் ஐபிஎல் கிங் என நிரூபித்துள்ளது.

சிஎஸ்கே செய்த சாதனை

சிஎஸ்கே செய்த சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 11 சீசன்களில் 10 முறை பிளே-ஆஃப் சென்றுள்ளது. அந்த சாதனையை எந்த ஐபிஎல் அணியும் இதுவரை செய்யவில்லை. 2020 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை சிஎஸ்கே தான் ஐபிஎல் தொடரின் முகமாக இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் நிலை

மும்பை இந்தியன்ஸ் நிலை

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்றாலும் சில சீசன்களில் பிளே-ஆஃப் கூட முன்னேற முடியாமல் தோல்வி அடைந்ததும் உண்டு. அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு ஈடு கொடுக்கும் ஒரே அணியாக வலம் வந்தது மும்பை.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் எல்லாமே மாறியது. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அணியையே மாற்ற வேண்டிய பரிதாப நிலையில் தான் உள்ளது சிஎஸ்கே. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ஒரே அணியாக இருந்தது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

லீக் சுற்றில் மற்ற அணிகள் அனைத்தும் பிளே-ஆஃப் செல்ல போராடிக் கொண்டு இருந்த நிலையில், முதல் அணியாக பிளே-ஆஃப் முன்னேறியது மும்பை அணி. அடுத்து பிளே-ஆஃப் சுற்றிலும் முதல் தகுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி டெல்லி அணியை 156 ரன்களுடன் தடுத்து நிறுத்தியது. அடுத்து 18.4 ஓவரில் வெற்றி இலக்கை துரத்திப் பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது.

உலகின் சிறந்த டி20 அணி

உலகின் சிறந்த டி20 அணி

இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்து வெற்றி பெற்றதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தான் உலகின் சிறந்த டி20 அணி என முன்னாள் வீரர்கள் பலரும் ஒரே நேரத்தில் புகழ்ந்து தள்ளினர். இந்த பெயரை வேறு எந்த உள்ளூர் டி20 அணியும் பெறவில்லை.

உலகக்கோப்பை வெல்லும்

உலகக்கோப்பை வெல்லும்

சிலர் இந்த மும்பை இந்தியன்ஸ் அணி உலகக்கோப்பை தொடரையும் வெல்லும் என பாராட்டியது தான் உச்சம். இத்தனை பெரிய வார்த்தைகள், பாராட்டுக்கள் அத்தனை எளிதில் வந்து விடாது. இந்த இடத்தில் தான் சிஎஸ்கேவை தூக்கி அடித்துள்ளது மும்பை.

சிஎஸ்கேவால் செய்ய முடியவில்லை

சிஎஸ்கேவால் செய்ய முடியவில்லை

சிஎஸ்கே அணி 10 ஐபிஎல் சீசன்களில் ஆதிக்கம் செலுத்திய போதும் அந்த அணியால் உலகின் சிறந்த டி20 அணி என்ற பெயரையோ, உலகக்கோப்பை வெல்லும் அணி என்ற பாராட்டையோ பெற முடியவில்லை. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Story first published: Wednesday, November 11, 2020, 18:55 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+