Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரிசல்ட் என்ன ஆச்சு.. தேடியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. வாயை பிளக்க வைத்த கூகுள்!

துபாய் : 2020 ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவை கூகுள் தேடு தளத்தில் தேடிய அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

2020 ஐபிஎல் இறுதிப் போட்டி துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்தப் போட்டி குறித்து பலரும் இணையத்தில் தேடி வந்தனர்.

ஐபிஎல், ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவு, மும்பை இந்தியன்ஸ், மும்பை - டெல்லி போட்டி முடிவு என பல்வேறு ஐபிஎல் வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது கூகுள்.

பரபரப்பான போட்டி

பரபரப்பான போட்டி

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 156 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை அணி சேஸிங் செய்தது. ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.

மும்பை அபார வெற்றி

மும்பை அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி சில ஓவர்களில் விக்கெட்களை இழந்தாலும் எளிதாக 18.4 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணி வெல்லும் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை ஆகும். மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பை வென்றும் சாதனை செய்தது மும்பை.

பட்டாசு கொளுத்திய கூகுள்

பட்டாசு கொளுத்திய கூகுள்

இந்த நிலையில், இந்தப் போட்டி குறித்து கூகுளில் தேடிய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் போட்டி தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய போது அந்த கூகுள் பக்கங்களில் பட்டாசு வெடிப்பது போன்ற கிராபிக்ஸ் வடிவமைப்பு இடம் பெற்று இருந்தது.

எந்தெந்த வார்த்தைகள்

எந்தெந்த வார்த்தைகள்

ஐபிஎல், ஐபிஎல் 2020, ஐபிஎல் இறுதிப் போட்டி, மும்பை இந்தியன்ஸ், மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் என ஐபிஎல் இறுதிப் போட்டி வெற்றி தொடர்பான வார்த்தைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் தேடிய போது பட்டாசு வெடிப்பதை பார்க்க முடிந்தது.

வியந்த ரசிகர்கள்

வியந்த ரசிகர்கள்

எப்போதும் கிரிக்கெட் போட்டிகளின் முடிவில் கூகுளில் அது பற்றி தேடும் ரசிகர்கள் இந்த முறை ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதற்கு முன்பும் கூகுள் இது போல சில சமயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐபிஎல் தொடருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் புதிய ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது.

தீபாவளி வருகிறது

தீபாவளி வருகிறது

ஐபிஎல் வெற்றி மட்டுமின்றி தீபாவளி வருவதையும் இது நினைவு படுத்தியது. நவம்பர் 14 அன்று இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, ஐபிஎல்-இல் மூழ்கி இருந்த ரசிகர்களுக்கு அதை நினைவுபடுத்துவது போலவும் இருந்தது கூகுளின் கிராபிக்ஸ்.

Story first published: Wednesday, November 11, 2020, 10:51 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+