Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு தங்கமா? மும்பை இந்தியன்ஸ் வீரரை மடக்கிய அதிகாரிகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்ற நிலையில், அந்த அணியின் வீரர் க்ருனால் பாண்டியா இந்தியா திரும்பினார்.

அவர் தன்னுடன் அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் சில அதிக விலை கொண்ட பொருட்களை எடுத்து வந்துள்ளார்.

அவரை விமான நிலையத்திலேயே வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மடக்கி விசாரணை நடத்தினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டி நவம்பர் 10 அன்று நடைபெற்றது. அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதனை புரிந்தது.

க்ருனால் பாண்டியா

க்ருனால் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியில் க்ருனால் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கை கொடுத்தார். பெரிய அளவில் இல்லை என்றாலும் அணியில் மறுக்க முடியாத வீரராக இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றிக்கு தேவையான கடைசி ரன்னை அவர் தான் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இடம் இல்லை

இந்திய அணியில் இடம் இல்லை

க்ருனால் பாண்டியா முன்பு இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால், தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்திய அணி ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற நிலையில், அவர் துபாயில் இருந்தார்.

மும்பை திரும்பினார்

மும்பை திரும்பினார்

பின்னர் அவர் துபாயில் இருந்து மும்பை கிளம்பி வந்தார். மும்பை விமான நிலையத்தில் அவர் அதிகாரிகளிடம் சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஐபிஎல் கோப்பை வென்ர் கையுடன் அவர் சிக்கியதால் கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த செய்தி வேகமாக பரவியது.

மடக்கிய அதிகாரிகள்

மடக்கிய அதிகாரிகள்

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். அவரிடம் அதிக தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காகவே விசாரணை நடந்துள்ளது. அது பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

என்ன பொருட்கள்?

என்ன பொருட்கள்?

அவரிடம் தங்க நகைகள், வளையல்கள், அதிக விலை மதிப்பு கொண்ட வாட்ச்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தனிநபர் எடுத்துச் செல்லக் கூடிய அளவை விட அவர் அதிக நகைகளை எடுத்துச் சென்றதால் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

பரபரப்பு

பரபரப்பு

மும்பை இந்தியன்ஸ் வீரர், இந்திய அணியில் இடம் பெற்றவர், ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் என்பதால் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்தில் இருந்த க்ருனால் பாண்டியாவிடம் எப்படி இத்தனை நகைகள் வந்தன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 12, 2020, 21:09 [IST]
Other articles published on Nov 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+