Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வார்த்தையை சொல்லி.. மும்பையை சீண்டி விட்ட “ஹல்க்”.. பின்னணியில் பாண்டிங்? பைனல் பரபரப்பு!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோத உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சீண்டி விட்டுள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.

மும்பை அணி தோற்க வேண்டியது பாக்கி உள்ளது எனக் கூறி மனதளவில் அந்த அணியை பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தினார் அவர்.

இது அப்படியே ஆஸ்திரேலிய பாணி. ஆஸ்திரேலிய வீரரான மார்கஸ் இதை கூறியதில் ஆச்சரியமில்லை. ஆனால், இதன் பின்னணியில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருக்கக் கூடும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே-ஆஃப் தொடரின் இரண்டாம் தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்தப் போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக ஆடி ஆச்சரியம் அளித்து இருந்தார்.

ஹல்க் பொம்மை

ஹல்க் பொம்மை

அந்தப் போட்டியில் 3 விக்கெட்களும் வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்போது பேசுகையில் கையில் ஹல்க் பொம்மையுடன் வந்தார். அது குறித்து கேட்ட போது தன்னை ஹல்க் போன்றே எண்ணிக் கொள்வதாகவும், விக்கெட் எடுத்த உடனும் கூட அதே போல தான் கொண்டாடுவதாகவும் கூறினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அடுத்து மும்பை இந்தியன்ஸ் உடனான இறுதிப் போட்டி பற்றி பேசிய அவர் மும்பை அணி நல்ல அணி. தொடர்ந்து சிறப்பாக ஆடி உள்ளது. ஆனால், அவர்கள் ஒரு போட்டியில் மோசமாக தோல்வி அடைய வேண்டியது பாக்கி உள்ளது என்றார். அதாவது ஒரு தொடரில் எந்த ஒரு அணியும் மோசமான தோல்வி ஒன்றை அடையும். மும்பை அணி இதுவரை அப்படி தோற்கவில்லை என அவர் கூறினார்.

மும்பை அணி சீறும்

மும்பை அணி சீறும்

எனவே, இறுதிப் போட்டியில் மும்பை அணி தோல்வி அடையும் என மறைமுகமாகக் கூறி சீண்டினார் மார்கஸ். இந்த சீண்டலுக்கு இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பதில் அளிக்க முயற்சி செய்யக் கூடும். மார்கஸ் ஸ்டோய்னிஸ்-க்கு எதிராக சீறும்.

பாண்டிங் திட்டம்

பாண்டிங் திட்டம்

இது போல போட்டிக்கு முன்பே எதிரணியை சீண்டும் டெக்னிக் எல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் தான் அதிகம் செய்வார்கள். ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்த போது இது அடிக்கடி நடந்தது. தற்போது அவர் டெல்லி அணியின் பயிற்சியாளராக அதே முறையை கையாண்டுள்ளார்.

Story first published: Monday, November 9, 2020, 20:55 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+