Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களையா ஜெயிக்க மாட்டோம்னு சொன்னீங்க? தடைகளை உடைத்து எறிந்து.. வரலாறு படைத்த மும்பை இந்தியன்ஸ்!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் சீசனில் பலமான அணியாக இருந்த போதும் கூட பலரும் அந்த அணி இந்த சீசனில் வெற்றி பெறாது என்றே கூறி வந்தனர் .

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொன்னார்கள். ஒற்றைப்படை ஆண்டில் மட்டும் தான் மும்பை அணி வெல்லும் என்றார்கள் பலர்.

சிலர் இரட்டைப்படை ஆண்டில் புதிய அணியான டெல்லி கேபிடல்ஸ் தான் வெல்லும் என வேறு கணக்கு போட்டு கூறினார்கள்.

மனதளவில் சந்தேகம்

மனதளவில் சந்தேகம்

ஒன்றிரண்டு விஷயம் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி சில கணக்குகள் சொல்லப்படும். அந்த அணியும் அதே போல வெற்றி, தோல்வி அடையும். அது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இரட்டைப்படை வருடம்

இரட்டைப்படை வருடம்

2020 ஐபிஎல் சீசனின் லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அப்போதும் கூட 2013, 2015, 2017, 2019 என ஒற்றைப்படை ஆண்டில் மட்டுமே மும்பை வெல்லும். இரட்டைப்படை ஆண்டான 2020இல் மும்பை வெற்றி பெறாது என்றார்கள்.

புதிய அணி தான் வெல்லும்

புதிய அணி தான் வெல்லும்

மேலும், 2008 முதல் இரட்டைப்படை ஆண்டில் மட்டுமே புதிய ஐபிஎல் அணிகள் வெற்றி பெற்றுள்ளது என்பதை சுட்டிக் காட்டி, 2020 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் ஆடும் டெல்லி கேபிடல்ஸ் அணி தான் வெற்றி பெறும் என சிலர் வேறு கணக்கு ஒன்றை கூறினார்கள்.

பெங்களூர் அணி வீரர்கள்

பெங்களூர் அணி வீரர்கள்

அதே போல, பெங்களூர் அணி ஒரு வீரரை வேண்டாம் என வெளியேற்றினால், அந்த வீரர் அடுத்த சீசனில் எந்த அணியில் ஆடுகிறாரோ அந்த அணி வெற்றி பெறும் என்றார்கள். டெல்லி அணியில், பெங்களூர் அணியால் வெளியேற்றப்பட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆடி வருவதை குறிப்பிட்டார்கள்.

ஐந்து முறை வெற்றி

ஐந்து முறை வெற்றி

ஆனால், இந்த கணக்குகளை எல்லாம் தவிடுபொடியாக்கி தங்கள் திறமையை வெளிக்காட்டி அபார வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பை வென்றதோடு, ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

பரபரப்பான இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, பின் மீண்டு 20 ஓவர்களில் 156 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டியது மும்பை அணி. ரோஹித் சர்மா 68 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியால் மும்பை அணி ஐபிஎல் கோப்பை வென்றது.

சாதனை

சாதனை

வேறு எந்த அணியும் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. சிஎஸ்கே அணி மும்பை அணிக்கு அடுத்து அதிகபட்சமாக மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி தன் ஆதிக்கத்தை தொடர்ந்து ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது.

Story first published: Wednesday, November 11, 2020, 10:19 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+