Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 மாசத்துக்கு முன்பே “மேன் ஆஃப் தி மேட்ச்”சை வாங்கிய அம்பானி.. இந்த திறமை வேற யாருக்கும் வராது!

மும்பை : உண்மையாகவே இப்படி ஒரு விஷயம் நடக்கும் என யாரும் நினைத்துப் பார்க்கவே முடியாது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஆட்டநாயகனை குறி வைத்து வாங்கியது அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி.

அதுவும் எந்த அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப் போகிறார்களோ.. அதே அணியிடம் இருந்து வாங்கியது தான் உச்சகட்டம்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சிறந்த ஸ்விங் வேகப் பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் 2019ஆம் ஆண்டு டெல்லி அணியில் இடம் பெற்று இருந்தார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது. அவர் மும்பை அணியின் பந்துவீச்சில் பும்ராவுடன் இணைந்து எதிரணிகளை கலங்க வைத்தார்.

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் உலகில் முன்னணியில் இருப்பவர். அவர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் முதன்முறையாக இடம் பெற்று 18 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

ஒதுக்கிய டெல்லி

ஒதுக்கிய டெல்லி

அடுத்த ஆண்டு காகிசோ ரபாடா டெல்லி அணியில் இணைந்தார். அவர் விக்கெட் வேட்டையாடி மிரட்டினார். ட்ரென்ட் போல்ட் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டெல்லி அணி அவரை மொத்தமாக ஒதுக்கியது.

வலை வீசிய மும்பை

வலை வீசிய மும்பை

2020 ஐபிஎல் சீசனுக்கு முன் ஐபிஎல் அணிகள் வீரர்களை அணி மாற்றம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு சிறந்த புதிய பந்தை வீசும் ஸ்விங் பந்துவீச்சாளர் தேவை என்பதால் டெல்லி அணிக்கு தேவைப்படாத ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள வலை வீசியது.

2020 ஐபிஎல் செயல்பாடு

2020 ஐபிஎல் செயல்பாடு

டெல்லி அணி அவரை பணம் பெற்றுக் கொண்டு மும்பை அணியிடம் தாரை வார்த்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. 2020 ஐபிஎல் தொடரில் ட்ரென்ட் போல்ட் மும்பை அணிக்கு முதல் ஓவரை வீசினார். பவர்பிளே ஓவர்களில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் அவர்.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

இந்த ஒரே சீசனில் போட்டிகளின் முதல் ஓவரில் மட்டும் அவர் 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் தன் பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவருக்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

எப்படி முடிந்தது?

எப்படி முடிந்தது?

மும்பை இந்தியன்ஸ் எப்படி சரியாக டெல்லி அணியின் வீரரை சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே விலைக்கு வாங்கி அதே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அம்பானியின் அணி என்பதால் இதெல்லாம் சகஜம் தான் என கிண்டல் செய்தும் வருகின்றனர்.

டெல்லி சோகம்

டெல்லி சோகம்

இதில் பரிதாப நிலையை அடைந்தது டெல்லி அணிதான். நல்ல வீரரை தவறாக கணித்து வெளியேற்றியதோடு, அவரே தங்கள் அணிக்கு 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எமனாகவும் வருவார் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

Story first published: Wednesday, November 11, 2020, 19:25 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+