Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 4 டெல்லி வீரர்கள். உள்ளே வரும் உள்ளூர் வீரர்.. கதையை முடிக்கப் போகும் ரோஹித்.. பரபர ட்விஸ்ட்!

துபாய் : ரோஹித் சர்மா உள்ளூர் வீரர் ஒருவரை வைத்து டெல்லி அணிக்கு தலைவலியை ஏற்படுத்த உள்ளார்.

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சுழற் பந்துவீச்சாளர்

சுழற் பந்துவீச்சாளர்

மும்பை இந்தியன்ஸ் அணி பலமாக இருக்கும் நிலையில், டெல்லி அணியை சிக்கலில் ஆழ்த்த அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ள ஒரு சுழற் பந்துவீச்சாளரை ஆடவைக்க உள்ளார்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் நான்கு முக்கிய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஷிகர் தவான், ஷிம்ரான் ஹெட்மயர், ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல். இவர்கள் நால்வரும் பல போட்டிகளில் அணியை வெற்றி பெற வைக்கும் ஆட்டத்தை ஆடி உள்ளனர்.

இடது கை வீரர்கள்

இடது கை வீரர்கள்

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின் ஆடுவதில் சிரமம் ஏற்படும். அதை வைத்து தான் ரோஹித் சர்மா திட்டமிட்டு உள்ளார். ஜெயந்த் யாதவ் ஆஃப் ஸ்பின்னர். அவரை வைத்து டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஒரு போட்டி மட்டுமே

ஒரு போட்டி மட்டுமே

இந்த சீசனில் ஜெயந்த் யாதவ் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளார். அதுவும் டெல்லி அணிக்கு எதிரான போட்டி தான். அந்தப் போட்டியில் அவர் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

டெல்லி வீரர்

டெல்லி வீரர்

இப்படி ஒரு வீரரை வைத்துத் தான் திட்டமிட்டுள்ளது மும்பை அணி. இதில் மற்றொரு முக்கிய விஷயம் ஜெயந்த் யாதவ் 2019 ஐபிஎல் தொடருக்கு முன் டெல்லி அணியால், மும்பை அணிக்கு அணி மாற்றப்பட்ட வீரர். டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் பற்றி நன்கு தெரியும் என்பதால் அவரை பயன்படுத்த உள்ளது மும்பை.

Story first published: Tuesday, November 10, 2020, 13:09 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+