Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5வது ஐபிஎல் கோப்பை வென்றது மும்பை.. தெறிக்கவிட்ட ரோஹித்.. டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை புரிந்துள்ளது.

இறுதிப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி ரோஹித் சர்மாவின் அதிரடியால் எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு முதல் பந்தில் அதிர்ச்சி அளித்தார் மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட்.

ஸ்ரேயாஸ், பண்ட் போராட்டம்

ஸ்ரேயாஸ், பண்ட் போராட்டம்

மார்கஸ் ஸ்டோய்னிஸ் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து ரஹானே 2, தவான் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் அதன் பின் ரன் சேர்க்க போராடினர். பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சு

ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சு

அடுத்து ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 5 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ட்ரென்ட் போல்ட் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி டெல்லி அணியின் சரிவுக்கு காரணமாக இருந்தார்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் நின்று 65 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் போல்ட் 3, நாதன் கோல்டர் நைல் 2, ஜெயந்த் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

ரோஹித் சர்மா அதிரடி

ரோஹித் சர்மா அதிரடி

சேஸிங்கில் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். டி காக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஒத்துழைப்பு அளிக்க, ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். சிக்ஸர், ஃபோர் என பந்தை பறக்கவிட்டார்.

சூர்யகுமார் விக்கெட்

சூர்யகுமார் விக்கெட்

இடையே சூர்யகுமார் யாதவ் 19 ரன்கள் எடுத்து இருந்த போது ரோஹித் சர்மா ரன் ஓடுமாறு அழைக்க, அவர் ரன் ஓட மறுத்தார். பின் ரோஹித் சர்மா விக்கெட்டை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்தார். அடுத்து இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ரோஹித் சர்மா 68 ரன்கள்

ரோஹித் சர்மா 68 ரன்கள்

ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் அன்ரிச் நோர்ஜே பந்துவீச்சில் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அடுத்து பொல்லார்டு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அதிக பந்துகள் மீதமிருந்ததால் அழுத்தம் ஏற்படவில்லை.

அபார வெற்றி

அபார வெற்றி

இறுதியில் க்ருனால் பாண்டியா கடைசி ரன்னை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வெற்றி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை கோப்பை வென்றது மும்பை அணி.

Story first published: Wednesday, November 11, 2020, 6:43 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+